புதர்
புதா் அல்லது முட்செடி என்பது சிறியது முதல் நடுத்தர அளவுள்ள சிலவகையான தாவரங்களைக் குறிக்கும் சொல்லாகும். செடிகள் போலல்லாமல், புதர்கள் தரையில் மேலே விறைப்புத்தன்மை வாய்ந்த தண்டுகளைக் கொண்டுள்ளன. இவை பல நெருங்கிய கிளைகள், குறுகிய உயரம் ஆகியவற்றால் மரங்களிலிருந்து வேறுபடுகின்றன. பொதுவாக இவை 6 மீ (20 அடி) உயரத்துக்கு கீழ் உள்ளன.[1] பல இனத் தாவரங்கள் வளர்ந்து வரும் நிலைமையைப் பொறுத்து, புதர்கள் அல்லது மரங்களாக வளரலாம். சிறிய, உயரம் குறைந்த புதர்கள், பொதுவாக 2 மீ (6.6 அடி) உடையவை. பொதுவாக லாவெண்டர், பெரிவிங்கில் மற்றும் மிகச் சிறிய தோட்ட வகை ரோஜாக்கள் போன்றவை பெரும்பாலும் "சப்ராபுகள்" என அழைக்கப்படுகின்றன.[2]
காணப்படும் பகுதி
தொகுதரிசுநிலங்களில் புதா் மண்டிக் காணப்படும். மிதமான மழையைப் பெறும் நிலப்பகுதிகளில் பொதுவாகப் புதா்கள் காணப்படுகின்றன. அதிகமான மழைப்பொழிவைப் பெறும் பசுமை மாறாக்காடுகளிலும் உயரமான மரங்களின் கீழ் அடுக்கில் புதா்கள் அமைந்துள்ளன.
புதா்த் தாவரங்கள்
தொகுதுத்தி, சுண்டைக்காய், எலந்தை, கடுக்காய், தூதுவளை, செம்பருத்தி, ஆவாரை, பெருந்தும்பை போன்ற செடிவகைத் தாவரங்களும் கோரை, நாணல், சம்பு போன்ற புல்வகைத் தாவரங்களும் புதா்த்தாவரங்களாகும்.
சிறப்பு
தொகு1) புதா் ஒரு வகையான சூழியல் வாழிடம் ஆகும். 2) மூலிகைப் போன்ற பயன்மிக்க தாவரங்கள் இயற்கையாக வளருமிடமாகும். 3) காற்று, மழையினால் ஏற்படும் மண்ணரிப்பைத் தடுக்கின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Anna Lawrence; William Hawthorne (2006). Plant Identification: Creating User-friendly Field Guides for Biodiversity Management. Routledge. pp. 138–. ISBN 978-1-84407-079-4.
- ↑ Peggy Fischer (1990). Essential shrubs: the 100 best for design and cultivation. Friedman/Fairfax Publishers. pp. 9–. ISBN 978-1-56799-319-6.
... Examples of subshrubs include candytuft, lavender, and rosemary. These broad definitions are ...