புதிய புரூஸ் லீ (திரைப்படம்)
புதிய புரூஸ் லீ (Puthiya Bruce Lee) 2018இல் வெளியான அதிரடிக் காட்சிகள் நிறைந்த தமிழ் மொழியில் வெளிவந்த படமாகும். இப்படத்தை முளையூர் ஏ. சோணை என்ற அறிமுக இயக்குநர் எழுதி இயக்கியுள்ளார்.[1] இந்தத் திரைப்படத்தில் புரூஸ் லீ போலவே தோற்றமுடைய புரூஸ் என்ற நடிகர், ரசியா மற்றும் அஷ்வந்த் திலக் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர் [2][3] இந்த படத்தில் தற்காப்பு கலை தொடர்பான சண்டை காட்சிகளில் ஈடுபட்டிருக்கும் முக்கிய பாத்திரத்தில் ப்ரூஸ் தோன்றி நடித்திருந்தார்.[4] இப்படம் புரூஸ் லீ நடித்த சண்டைக் காட்சிகளை மையமாகக் கொண்டு எடுக்கபட்டுள்ளது.[5]
புதிய புரூஸ் லீ | |
---|---|
இயக்கம் | முளையூர் ஏ. சோணை |
இசை | செளந்தர்யன் |
நடிப்பு | புருஸ் ஜான் ரசியா அஸ்வந்த் திலக் |
கலையகம் | ஸ்ரீ திண்டுக்கல் வெங்கடேஷ்வரா பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 25, 2018 |
ஓட்டம் | 117 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுருக்கம்
தொகுஒரு மலையோர கிராமத்தில் புரூஸ் தனது தாயுடன் வசித்து வருகிறான். அவனது கிராமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், அதனால் வரும் ஆபத்துகளையும் தனியே நின்று எதிர்த்து போராடும் குணமுடையவன். ஊரிலுள்ள பெரும்பாலானோர் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு புரூஸ் உதவியையே நாடுகிறார்கள். ஒரு நாள் நடந்த தீ விபத்தில் அவனது தாய் இறந்து போகிறார். புரூஸின் தாய் மாமன் அவனை மதுரைக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் அந்த கிராமத்து மக்கள் தங்களை காப்பாற்ற அவனை திரும்ப அனுப்பிட அவனது தாய்மாமனிடம் வேண்டுகின்றனர். அவனது தாய்மாமன் தனது வியாபாரத்தில் சில பிரச்சனைகளைச் சந்திக்கிறார். கிராமத்து இளைஞன் புரூஸ் எவ்வாறு தனது சண்டையிடும் திறமைகளால் தனது தாய் மாமனின் சிக்கலைத் தீர்த்து வைக்கிறான் என்பதே படத்தின் கதையாகும்[6]
நடிகர்கள்
தொகு- புரூஸ் ஜான்
- ரசியா
- அஷ்வந்த் திலக்
- சுரேஷ் நரங்
தயாரிப்பு
தொகுஇந்த படத்தின் படப்பிடிப்பு 2013 ஆம் ஆண்டு துவங்கியது, ஆனால் தயாரிப்பில் ஏற்பட்ட சில தாமதங்களால் 2018 மே 25 அன்றுதான் வெளிவந்தது. பல திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றிய இதன் இயக்குநர் சோணை இறந்து போன தற்காப்புக் கலை வீரரும், நடிகருமான புரூஸ் லீ யின் நினைவுகளை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் தனது முதல் படத்திற்கு புதிய புரூஸ் லீ என்று பெயரிட்டார்.[7] கராத்தே என்ற தற்காப்புக் கலையில் நிபுணத்துவம் பெற்ற புரூஸ் ஜான் என்பவர் அசல் புரூஸ் லீயைப் போலவே இருந்ததால் அவர் இப்படத்திற்கு பொருத்தமானவராக இருந்தார் என இதன் இயக்குநர் கூறியுள்ளார்.[8] இதன் கதை புரூஸ் லீயின் இரு முக்கிய அம்சங்களான ஒழுக்கம் மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது என இயக்குநர் சோணை கூறுகிறார்.[9] இப்படத்தில் வில்லன் பாத்திரத்தின் நடித்துள்ள சுரேஷ் நரங் என்பவருக்கும் இதுவே முதல் படமாகும்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Puthiya Brucelee Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes, பார்க்கப்பட்ட நாள் 2018-06-10
- ↑ BookMyShow. "Puthiya Brucelee Movie (2018) | Reviews, Cast & Release Date in Pandalam - BookMyShow". BookMyShow (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-10.
- ↑ "மீண்டும் வருகிறார் ‘புதிய புரூஸ்லீ’! - Samayam Tamil" (in ta). Samayam Tamil. 2018-05-04. https://m.tamil.samayam.com/tamil-cinema/movie-news/puthiya-bruce-lee-trailer-teaser-hd/articleshow/64031125.cms.
- ↑ Ghosh, Devarsi. "Bruce Lee died in 1973, but Indian filmmakers refuse to let his memory fade" (in en-US). Scroll.in. https://scroll.in/reel/878194/bruce-lee-died-in-1973-but-indian-filmmakers-refuse-to-let-his-memory-fade.
- ↑ Staff, Scroll. "‘Puthiya Brucelee’ trailer: This martial arts hero speaks in Tamil" (in en-US). Scroll.in. https://amp.scroll.in/article/878110/puthiya-brucelee-trailer-this-martial-arts-hero-speaks-in-tamil.
- ↑ "புதிய புரூஸ்லி || Puthiya Brucelee Movie Review". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2018-06-10.
- ↑ "A Bruce Lee in Tamil cinema! - Times of India". The Times of India. https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/A-Bruce-Lee-in-Tamil-cinema/articleshow/27533510.cms.
- ↑ "A lookalike of Lee in 'Puthiya Bruce Lee'" (in en). deccanchronicle. 2013-12-23. https://www.deccanchronicle.com/131223/entertainment-kollywood/article/lookalike-lee-puthiya-bruce-lee.
- ↑ "`Puthiya Bruce Lee` to introduce Lee`s doppelganger" (in en). Zee News. 2013-12-18. http://zeenews.india.com/entertainment/regional/-puthiya-bruce-lee-to-introduce-lee-s-doppelganger_147953.html.
- ↑ "There comes another Bruce Lee - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/There-comes-another-Bruce-Lee/articleshow/27461362.cms.