புதிர்வழி

புதிர்ப்பாதை (maze) அல்லது புதிர்வழி என்பது, சிக்கலான முறையில் ஆங்காங்கே கிளைத்துச் செல்லுகின்ற ஒரு வழி அமைப்பு ஆகும். ஒரு இடத்தில் இருந்து இன்னோரிடத்துக்குச் சரியான வழியைக் கண்டுபிடித்துச் சென்று அடைவதை நோக்கமாகக் கொண்டதே இப்புதிர். இது பெரும்பாலும் புதிர் விளையாட்டுகளை விளையாடப் பயன்படுகிறது. கிரீட்டுச் சிக்கல் வழி எனப்படுவதே அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையான புதிர்வழி ஆகும்.[1]

ஒரு சிறிய புதிர்வழி
Maze at St. Louis Botantical Gardens

சிக்கல் வழி (libyrinth) எனப்படுவதும் புதிர்வழியும் ஒன்றே எனப் பொதுவாகக் கருதப்பட்டாலும் உண்மையில் சிக்கல் வழி, புதிர்வழியில் இருந்து வேறுபட்டது. சிக்கல் வழி கிளைவழிகள் எதுவும் இல்லாத ஓரொழுங்கு வழி. ஆனால் பொது வழக்கில், புதிர்வழியும் சிக்கல் வழியும் சிக்கலான குழப்பம் நிறைந்த பாதையைக் குறிக்கிறது.[2]

புதிர்வழி அமைப்புதொகு

புதிர்வழிகள் சுவர்களையும் அறைகளையும் கொண்டனவாக அமைக்கப்படுகிறன. புதிர்வழியின் சுவர் செடிகள், கம்புகள், வைக்கோல் கட்டுகள், புத்தகம், பாவுகற்கள், செங்கற்கள், பயிர் நிலங்கள் என ஏதாவதொன்றால் அமைக்கப்படுவது உண்டு.

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிர்வழி&oldid=2746401" இருந்து மீள்விக்கப்பட்டது