புதிர் நிலை

புதிர்நிலை என்பவை மையத்திலிருந்து வெளியே செல்ல முடியாதவாறும், உள்ளிருந்து வெளியே வரமுடியாதவாறும் அமைக்கப்பட்ட பல்வேறு சூழ்நிலை பாதைகளுடன் உள்ளவை. இந்த புதிர்நிலைகளில் நடந்து சென்று மையப்பகுதியை அடைபவர்களின் வாழ்க்கை வெற்றியாக இருக்கும் என்பதும், கற்கள் மீது மிதித்தோ, தாண்டியோ செல்பவர்களுக்கு வாழ்வில் தோல்வி கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும். இந்து சமய இதிகாசமான மகாபாரதத்தில் அபிமன்யு சக்கரவியூகத்தில் மாட்டிக் கொண்டு உயிரிழந்தார். இந்தச் சக்கரவியூகம் இவ்வாறான புதிர்நிலையில் ஒன்றாகும். [1]

வகைகள் தொகு

புதிர்நிலைகள் அவைகளின் வடிவத்தினைப் பொறுத்து பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. புதிர் நிலைகளின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • வட்டப் புதிர்நிலைகள்
  • சுருள்வழி புதிர்நிலைகள்
  • சதுர புதிர்நிலைகள்
  • செவ்வக புதிர்நிலைகள்

தமிழகத்தில் உள்ள புதிர்நிலைகள் தொகு

  • தர்மபுரியை அடுத்துள்ள கம்பை நல்லூரில் 2500 ஆண்டுகள் பழைமையான கற்காலப் புதிர்நிலை உள்ளது. இதனை உலகின் பெரிய புதிர் நிலை என்று தெரிவிக்கின்றனர். [2] [3]
  • சேலம் மாவட்டத்தில் வேம்படித்தாளம் கிராமத்தில் பழமையான வட்ட புதிர்நிலை உள்ளது. இது 2000 ஆண்டுகள் பழமையானதாகும்.

ஆதாரங்கள் தொகு

  1. "வேம்படிதாளத்தில் புதிர் நிலை கண்டுபிடிப்பு: சேலம் வரலாற்று ஆய்வாளர்கள் பெருமிதம்".
  2. "2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த "புதிர்நிலை"".[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "பொற்கால புதிர் நிலை கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி ஆய்வாளர்கள் பெருமிதம்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிர்_நிலை&oldid=3221711" இலிருந்து மீள்விக்கப்பட்டது