புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புதுக்கயத்துவண்ணக்கன் கம்பூர்கிழான் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர். வண்ணத்துக்கன் எனும் சொல் நாணயச்சோதனையாளர் எனும் பணியைக் குறிக்கும். இவர் பாடிய பாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையில் 294 ஆவது பாடலாக உள்ளது.
இவர் பாடிய இப்பாடலின் முதல் இரண்டடிகள் ஆர்வக் கிளர்ச்சியைத் தோற்றுவிப்பதாய் அமைந்துள்ளன.[1]
பாடலின் முதல் இரண்டு அடிகள்
தொகுதீயும் வளியும் விசும்பு பயந்து ஆங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
அறிவியல் உவமை
தொகுவிசும்பிலிருந்து தீ தோன்றியது. தீயிலிருந்து வளி தோன்றியது. (இது அறிவியல் உண்மை)
அதுபோல,
தலைவன் மார்பு நோயையும், இன்பத்தையும் தோற்றுவிக்கிறது, என்கிறாள் தோழி.
அவன் பிரிவு நோய் தந்தது. இப்போது அவன் திருமணம் செய்துகொள்வது இன்பம் தருகிறது, என்கிறாள்.