புதுக்குடி வடநக்கர் திருக்கோவில்

புதுக்குடி வடநக்கர் திருக்கோவில்

தொகு

புதுக்குடி வடநக்கர் ஆலயம் சிதைவுண்ட காரணத்தால் வெள்ளூர் நடுநக்கர் ஆலய இடதுபுறத்தில் வடநக்கர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடும் பக்கதர்களுக்கு அருள் ஆசி வழங்கி வருகிறார். சிவராத்திரிநாளில் நவலிங்கபுர தரிசனம் காணவருவோர் வெள்ளூரில் அமைந்துள்ள இந்த சிவாலய இறைவனை வணங்கிச் சென்றால் வடநக்கர், நடுநக்கர் என்ற இரண்டு சிவபெருமானின் அருள்கிட்ட சிந்தைகுளிரும், வாழ்வில் சிறப்புகள் மிளிரும்.

வடநக்கர், நடுநக்கரைக் காணவரும் பக்தர்கள் திருநெல்வேலி – திருச்செந்தூர் பேருந்து வழித்தடத்தில் உள்ள புதுக்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ. பயண தூரத்தில் வெள்ளூர் சென்று தரிசிக்கலாம்.