புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

புதுக்கோட்டை மாவட்டமானது, ஜனவரி 14, 1974 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முன்னாள் புதுக்கோட்டை கோட்டத்தின் சில பகுதிகள் மற்றும் தஞ்சாவூா் மாவட்டத்தின் சில பகுதிகளையும் சோ்த்து அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உத்தரவுப்படி உருவாக்கப்பட்டது. அவர் கேட்டு கொண்டதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகம் அமைத்திட புதுக்கோட்டையை ஆண்ட கடைசி மன்னரான ராஜராஜகோபால தொண்டைமான் அவர்கள் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு தமிழ்நாட்டு அரசுக்கு வழங்கியுள்ளார். அந்த அரண்மனையிலேயே தற்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலம் செயல்பட்டு வருகிறது. [1] [2]

Pudukottai palace.jpeg 
அரண்மனையின் முகப்பு

மன்னரின் இந்த ஈகைப்பண்பை பெருமைப்படுத்தும் வகையில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள், மன்னர் அவர்களின் உருவச் சிலையினை 14.3.2000 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறந்து வைத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மன்னர் இராஜகோபால தொண்டைமான் மாளிகை என்றும் பெயர் சூட்டியுள்ளார். [3]

பரப்பளவு தொகு

இவ்வலுவலகம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.இதன் கட்டிடங்கள் இண்டோ-சாரசெனிக் திராவிடியன் கலை அம்சத்துடன் கூடிய வகையில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

சிறப்பு தொகு

இவ்வலுவலக முகப்பில் மன்னர் இராஜகோபால தொண்டைமானின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் கோபுரம் நமணசமுத்திரம் தொடர் வண்டி இருப்பு பாதையில் இருந்து பார்த்தால் கூட நன்கு தெரியும் அளவில் கட்டப்பட்டுள்ளது.

செயல்படும் அலுவலகங்கள் தொகு

  • மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
  • ஊரக வளர்ச்சி அலுவலகம்
  • பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை
  • ஆதிதிராவிடர் நலத்துறை
  • சமுக நலத்துறை
  • தமிழ் வளர்ச்சித்துறை
  • செய்தி மக்கள் தொடர்பு துறை
  • நில அளவைத்துறை
  • கனிம வளத்துறை
  • மாவட்ட தொழில் மையம்
  • தபால் நிலையம்
  • கலால் துறை ஆகிய அலுவலங்கள் அமைந்துள்ளன.மற்றும் கூட்ட அரங்குகளும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளன.

மேற்கோள் தொகு

  1. "புதுக்கோட்டை மன்னர் ராஜகோபல தொண்டைமானுக்கு நினைவு மணிமண்டபம்".
  2. "புதுக்கோட்டை வரலாறு".
  3. "மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!".