புதுச்சேரி சுற்றுச்சூழல் கழகம்
புதுச்சேரி சுற்றுச்சூழல் கழகம் என்பது புதுச்சேரியை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு கூட்டமைப்பு ஆகும். புதுச்சேரியின் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள அமைப்புகளான பூவுலகின் நண்பர்கள், செம்படுகை நன்னீரகம், பாண்டிகேன், புதுச்சேரி அறிவியல் இயக்கம், மக்கள் நாடி, புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு கூட்டியக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இக்கூட்டமைப்பு உருவானது. இவ்வமைப்பு சார்பில் சூழல் தொடர்பான பல்வேறு செயல்பாடுகள் நிகழ்த்தப்படுகின்றன.[1]
பசுமைத் தேர்தல் அறிக்கை
தொகுமார்ச் 2011 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி இந்த அமைப்பின் சார்பில் பசுமைத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. புதுடில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குநர் சுனிதா நாராயண் அந்த அறிக்கையை வெளியிட்டார்.[2]