புதுத் திறனாய்வு
புதுத் திறனாய்வு என்பது படைப்பை முதன்மைப்படுத்திய ஒரு திறனாய்வுக் கோட்பாட்டு வகையாகும். படைப்பாளியின் நோக்கமோ, அவரது வரலாற்று விடயங்களோ முக்கியம் இல்லை என்ற அடிப்படையில் படைப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது இவ்வகைத் திறனாய்வு. 1930கள் முதல் 1960கள் வரையிலான காலப்பகுதியில் இத் திறனாய்வு வகை பிரபலமாக இருந்தது. படைப்பாளிக்கு முக்கியத்துவம் கொடுத்த புனைவியத் திறனாய்வுக்கு எதிராகவே புதுத் திறனாய்வு உருவானது எனலாம்.[1]
குறிப்புக்கள்
தொகு- ↑ பஞ்சாங்கம், க., 2011. பக். 21.
உசாத்துணைகள்
தொகு- பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
- நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).