புதுமனைப் புகுவிழா
புதுமனைப் புகுவிழா என்பது புதியதாக வீடு கட்டி முடித்ததும் நல்ல நாள் பார்த்து அவ்வீட்டில் முதன்முதலாக குடியேறும் போது செய்யும் விழா ஆகும். இது பெரும்பாலும் அவரவர் சார்ந்துள்ள மதத்தின் படி செய்யப்படும் மதச்சடங்கு ஆகும். உறவினரையும், அண்டை அயலாரையும் அழைத்து பொதுவாக இவ்விழா செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில இடங்களில் புதுமனைப் புகுவிழாவின் போது வீட்டினுள் கணபதி ஹோமம் நடத்துவார்கள். இத்தகைய புதுமனைப் புகுவிழாவின் வீட்டின் அன்று அடுப்பில் பாலைக் காய்ச்சி விருந்தினருக்குக் கொடுத்து உபசரித்து மகிழ்வர். அதன்பின் உணவு விருந்தும் செய்வர். வீட்டின் முன்புற வாயில் வாழை மரம் முதலான மங்கலப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேலும் அன்று பசுவை வீட்டிற்குள் அழைத்து வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து, சிவன், பிரம்மா, விஷ்ணுவில் இருந்து அத்தனை பேரும் வாசம் செய்வதாக ஐதீகம். பசுவை அழைத்து வரும் போது அந்த வீட்டில் கோமியமிட்டாலோ, சாணமிட்டாலோ அவர்களுக்கு இன்னமும் அதிர்ஷ்டம் என்றும் நம்பப்படுகிறது. [1]
திருமணம் ஆனதும் மணப்பெண்ணைக் கணவன் வீட்டிற்கு முதன்முறையாக அழைத்துச் செல்லும்போது செய்யப்படும் சடங்கு. இந்த இரு நிகழ்ச்சிகளையுமே கிருகப்பிரவேசம் என்றும் சொல்லுவர். புதிய மனையில்(வீட்டில்) புகும் (வாசம் செய்ய நுழையும்) விழா.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://tamil.webdunia.com/article/traditional-knowledge-in-tamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-110120200020_1.htm