புது யுக இசை
புது யுக இசை என்பது புது யுக நம்பிக்கையுடன் தொடர்புடைய இசை ஆகும். இந்த இசை மென்மையாக மனதை அமைதிப்படுத்துவதாக இருக்கும்.[1]பெரும்பாலும் இசைக் கருவிகளே பயன்படுத்தப்படும். வாய்ப்பாட்டு அரிதாகவே இருக்கும். ஸ்டீஃபன் ஹால்பர்ன் முதன் முதலில் இவ்வகை இசையை உருவாக்கினார். ஆனால் அவர் இசையை வெளியிட வெளியீட்டு நிறுவனங்கள் முன்வரவில்லை. எனவே அவர் புது யுகக் கடைகள் மூலம் அவற்றை விற்பனை செய்தார். யான்னி, கியாட்ரோ, என்யா மற்றும் ஜார்ஜ் வின்ஸ்டன் போன்றோர் குறிப்பிடத்தக்க புது யுக இசைக்கலைஞர்கள் ஆவர்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "New Age Music". Synthtopia. 2007-09-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-01-31 அன்று பார்க்கப்பட்டது.