புத்திசந்திரன்
புத்திசந்திரன் (Budhichandhiran) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், உதகமண்டலம் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
முதலமைச்சர் ஜெயலலிதாவினால் மாற்றியமைக்கப்பட்ட மூன்றாவது அமைச்சரவையின் 5 மாத காலத்தில், நவம்பர் 2011ல் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். குறிப்பிட்ட பழங்குடியினரை மட்டும் ஆதரித்ததற்காக இவர் நீக்கப்பட்டார்.[2]
பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர். கணேசன் என்பவர், இத்தொகுதியை கைப்பற்றினார். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
- ↑ "Jayalalithaa sacks six Tamil Nadu ministers". NDTV. PTI. 4 November 2011. http://www.ndtv.com/india-news/jayalalithaa-sacks-six-tamil-nadu-ministers-572958. பார்த்த நாள்: 2017-05-04.
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-12-04. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.