புத்தூர் இளையபெருமாள் கோயில்

ராஜபாளையம் அருகில் உள்ள புத்தூர் என்னுமிடத்தில் இளையபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு நெடுங்காலமாக குலதெய்வமாக இருந்து வருகிறது. அவரம்பட்டியைச் சேர்ந்த சாலியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வரு வருடமும் ஆனி மாதம் குருபூஜை செய்து வருகின்றனர். இம் மலையில் சுவாமிகளாக முருகர், அய்யனார், மீனாச்சிஅம்மன், கருப்பசாமி, விநாயகர், மற்றும் பல சுவாமிகள் உள்ளன.