புத்தூர் கட்டு

புத்தூர் கட்டு அல்லது மாவு கட்டு என்பது எலும்பு முறிவு வைத்திய முறையாகும். தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இந்த மருத்துவமுறை பின்பற்றப்படுகிறது. இதில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் ஒருவித எண்ணெய் தடவி பின் சிறு சிறு குச்சிகள், மற்றும் மாவு போன்றவற்றை வைத்து இறுகக் கட்டி விடுகின்றனர்.

இறுகக் கட்டிவிடுவதால் சில நேரங்களில் இரத்த ஓட்டம் தடைபட்டு உடல்பகுதி செயலிழக்கவும் செய்வதாகக் கூறப்படுகிறது. இந்த முறையில் மருத்துவம் பார்ப்பவர்கள் ஆங்கில வைத்திய முறைகளில் ஒன்றான எக்ஸ் ரே போன்றவற்றை ஆராய்வதில்லை. அனுபவத்தின் அடிப்படையில் பார்ப்பதால், சில நேரங்களில் கைகள் தவறாக கோணிவிடுவதும் உண்டு.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தூர்_கட்டு&oldid=2744736" இருந்து மீள்விக்கப்பட்டது