புனித சவேரியார் ஆலயம் (புரத்தாக்குடி)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புனித சவேரியார் ஆலயம்' தமிழ்நாடு மாநிலத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மண்ணச்சநல்லூர் தாலுக்காவில் உள்ள புரத்தாக்குடி கிராமத்தில் அமைந்துள்ளது.
புனித சவேரியார் ஆலய வரலாறு
தொகு1680 - சேசு சபை குருக்களால் திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவர்களுக்காக கோவில் எழுப்பப்பட்டது.
1715 – பிரஞ்ச் ராணுவத் தளபதியின் மனைவி மரிஹினியால் கோவில் விரிவுபடுத்தப்பட்டு, புனித சவேரியாருக்கு அர்பணிக்கப்பட்டது.
1730 – வீரமா முனிவரின் கண்காணிப்பில் இருந்தது.
1762 – பெரியவர்சீலியில் இங்கிருந்த பங்கு குரு கோயில் எழுப்பினார்.
1767 – அருள் திரு சதானந்தரின் உடல் ஞானதிக்கர் தோப்பில் அடக்கம் செய்யப்பட்டது.
1774 – சேசு சபையின் பணி முடக்கம் – கோவானிய குருக்கள் இப் பங்கின் பொறுப்பேற்றார்- பாரிஸ் அத்திய வேதபோதக சபை பொறுப்பேற்குமாறு பணிக்கப்பட்டது..
1777 – பாரிஸ் அந்நிய வேதபோதக சபையின் ( M.E.P) வருகை.
1786 – அருள்திரு. பெப்ரி (M.E.P) பங்குத்தந்தை. 6000 – 7000 கிருஸ்தவர் – சாம்பெனாய்ஸ் ஆயர் வருகை.
1800 – 76, கிருஸ்தவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்த கருவுக்குச் சென்றனர். (கருர்)
1830 – பாரிஸ் மிஷனரிகள் புரத்தாக்குடி பங்கின் பொறுப்பேற்க முயலுதல்.
1835 – சேசு சபை மீண்டும் பொறுப்பேற்றல்.
1838 – அருள்திரு. கார்னியர் பங்குத்தந்தையானார்.
1839 – அருள்திரு. பெடின் பங்குத்தந்தையானார்.
1840 – இரு குடும்பங்கள் பிரிவினைச் சகோதரர் சபையில் சேர்ந்தனர். ஆண்கள் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது
1842 – பாண்டிச்சேரி – மதுரை மிஷன் எல்லை வரையறுக்கப்பட்டது. புரத்தாக்குடி பாண்டிச்சேரி மிஷனுக்குரியதாயிற்று. அருள்திரு. மஹெ புதிய பங்குத்தந்தையானார்.
1846 - அருள்திரு .லீகூஸ்ட் அடிகளார் பங்குத்தந்தையானார். 11 ஆண்டுகள் பணி. மிகவும் வணக்கத்திற்குரிய பொனான் ஆயரின் பங்கு விசாரனை.
1849 – புரத்தாக்குடியிலிருந்து பிரிந்து பெரியவர்சீலி தனிப்பங்காக அமைந்து, பங்குத்தந்தையரின் புதிய இல்லம் அமைக்கப்பட்டது.
1850 – பாண்டிச்சேரி மிஷனின் இங்குள்ள (தற்போதய குடந்தை மாவட்டம்) 5 மறை மாவட்டங்களில் ஒன்றாக விளங்கிற்று.
1855 – அருள்திரு. லீகூஸ்ட் அடிகள் வேதியர் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார்.
1857 – அருள்திரு. பெடினியர் பங்குத்தந்தையானார். மிகவும் வணக்கத்திற்குரிய – பொனான் ஆயர் அவர்களால் புதுவை மாதா – இருதய சபை மடம் இங்கு தோன்றியது. பெண்கள் தொடக்கப் பள்ளி தோற்றம்.
1863 – இறையடி அடைந்த அருள்திரு. லீகூஸ்ட் அடிகளார் உடல் ஞானாதிக்கர் தோப்பில் அடக்கம் செய்யப்பட்டது.
1865 – புதிய பங்கு குரு பிரிச்சார்டு.
1874 – உத்தமனூர் பங்கு புரத்தாக்குடியிலிருந்து பிரிதல்.
1875 – மிகவும் வணக்கத்திற்குரிய _ லவுணான் ஆயரின் பங்கு விசாரனை.
1884 – மிகவும் வணக்கத்திற்குரிய காந்தி ஆயரின் பங்கு விசாரனை. அருள்திரு. தோபியாஸ் அடிகளார் கோயிலை விரிவுபடுத்த தொடங்கினார்.
1888 – விரிவுடன் கூடிய புதிய கோவிலாய் கட்டி முடிக்கப்பட்டது.
1889 – அருள்திரு. தோபியாஸ் இறையடி சேர்தல். ஞானாதிக்கர் தோப்பில் அடக்கம் செய்யப்படுதல்.
1890 – அருள்திரு – டிடியர் _ பங்குத்தந்தையானார்.
1892 – அருள்திரு. அகஸ்டின் ஆவே பங்குத் தந்தையானார்.
1893 – அருள்திரு. சுவாமிநாதர் பங்குத்தந்தையானார். கணக்கெடுப்பு கத்தோலிக்கர்: 4000
1894 – மீண்டும் அருள்திரு. டிடியர் பங்குத் தந்தையானார்.
1895 – மந்தைவெளி பிரச்சனை _ நீதிமன்றத்தில் வழக்கு.
1897 – அருள்திரு. M.A. சேவியர் (சவரிநாதர்) பங்குத் தந்தையானார். 33 ஆண்டுகள் பணி.
1898 – 150 – கத்தோலிக்கர்கள் பிரிவினைச் சபையில் சேர்தல்.
1899 – குடந்தை மறைமாவட்டத்தின் தோற்ரம், புரத்தாக்குடி அதன் அங்கமாகுதல். நீதிமன்றம் தீர்ப்பு: வெற்றி.
1901 – இந்திய வைஸ்ராயின் ஆணை ( பங்குக்குள்ள உரிமை) பெறல்.
1906 – பிரிவினைச் சபையில் சேர்ந்தோர் மீண்டும் கத்தோலிக்கராகுதல்.
1909 – அன்னா சவரிநாதர் ஞானாதிக்கர் தோப்பில் அடக்கம் செய்யப்பட்டார்.