புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில் பெண்களுக்கான புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இது கோட்டாறு மறைமாவட்டத்தின்கீழ் இயங்குகின்றது.
வரலாறு
தொகு1910 ஆம் ஆண்டில் பெல்ஜியத்தில் உள்ள இம்மகுலாேட்தி கோர்டிஸ் மரியா சகோதரிகள் சபையால் இப்பள்ளி தொடங்கப்பட்டது. பள்ளியின் குறிக்கோள் 'மேலே உயர்வுதல்'ஆகும். ஆரம்பப் பள்ளியாக துவங்கப்பட்டு 1920 ஆம் ஆண்டில் நடுத்தரப் பள்ளியாக உயா்த்தப்பட்டது. ஆங்கில நடுநிலைப் பள்ளி பின்னர் தொடங்கப்பட்டது. 1944 ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாக உயா்த்தப்பட்டது. 1948 இல் மிகவும் குறைவான பள்ளிகளே மேல்நிலைக்கு உயா்த்தப்பட்டது. அதில் இப்பள்ளியும் ஒன்றாகும்.