புனித நிக்கோலசு தோட்டம்

புனித நிக்கோலசு தோட்டம் (The Saint Nicolas Garden) பெய்ரூத்தின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றான அச்ராஃபி மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள தபரிசின் அருகாமையில் சார்லசு மாலேக் தெருவில் அமைந்துள்ள ஒரு பொதுமக்களுக்கான தோட்டமாகும். இந்தத் தோட்டமானது லெபனான் கட்டிடக்கலை நிபுணர் ஃபெர்டிலாண்ட் டேகெர் என்பவரால் 1964 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டதாகும்.[1] இந்தத் தோட்டத்தின் பரப்பானது 22,000 சதுர மீட்டர் (2,40,000 சதுர அடி) ஆகும். இந்தத் தோட்டமானது, புனித நிக்கலசின் நினைவாக அமைந்துள்ள, பழமை வாய்ந்த கிரேக்க தேவாலயத்தைப் பார்க்கும் விதமாக அமைந்துள்ளது.[2] 

மேற்கோள்கள் தொகு

  1. Al Balad Newspaper
  2. Doyle, Paul.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_நிக்கோலசு_தோட்டம்&oldid=3911093" இலிருந்து மீள்விக்கப்பட்டது