புனித பர்த்தலமேயுவின் பவுலீனுஸ்
புனித பர்த்தலமேயுவின் பவுலீனுஸ் (Paulinus of St. Bartholomew) என்பவர் ஆசுத்திரியா நாட்டில் பிறந்து, கத்தோலிக்க திருச்சபையில் கார்மேல் துறவியாகவும் மறைபரப்பாளராகவும் கீழைநாட்டியல் (Oriental studies) துறையில் தேர்ச்சிபெற்றவராகவும் விளங்கியவர்.
பவுலீனுஸ் ஆசுத்திரிய நாட்டின் தென்பகுதியில் ஹோஃப் ஆம் லைட்ஹாபெர்கெ என்னும் நகரில் 1748, ஏப்பிரல் 25ஆம் நாள் பிறந்தார். அவர் உரோமை நகரில் 1806, சனவரி 7ஆம் நாள் உயிர்துறந்தார். பவுலீனுசின் இயற்பெயர் யோகான் பிலிப்பு வெஸ்டின் (Johann Philipp Wesdin). அவர் கார்மேல் துறவியாக மாறியபோது புதிய பெயரை ஏற்றார். அப்பெயர் பல மொழிகளில் பல வடிவங்களில் அறியப்படுகிறது. இலத்தீன்: Paulinus S. Bartholomaeo, Paulinus A S. Bartholomaeo, இத்தாலியம்: Paolino da San Bartolomeo, மலையாளம்/தமிழ்: Paulinus Paathiri, பிரெஞ்சு: Paulin de St Barthelemi'.[1][2]
ஐரோப்பாவில் முதன்முதலாக வெளியான சமசுகிருத இலக்கண நூலின் ஆசிரியர் என்னும் சிறப்பு இவருக்கு உண்டு.[3] இந்திய மொழிகளுக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதை ஆய்வுகள் வழியாக முதன்முதலாம வெளிக்கொணர்ந்தவர்களுள் இவரும் ஒருவர்.[4][5][6]
இந்தியாவில் பணி
தொகுபவுலீனுஸ் தெற்கு ஆசுத்திரியாவில் வேளாண்தொழில் குடும்பத்தில் பிறந்தார். இருபது வயதில் கத்தோலிக்க திருச்சபையில் கார்மேல் என்னும் துறவற சபையில் உறுப்பினர் ஆனார். அவர் பிராகு நகரில் மெய்யியலும் இறையியலும் பயின்றார். உரோமையில் புனித பங்கிராசு கல்லூரியில் கீழைநாட்டியல் துறையில் ஆய்வுகளைத் தொடர்ந்தார்.[7]
1776ஆம் ஆண்டு பவுலீனுஸ் இந்தியாவின் மலபார் பகுதிக்கு மறைபரப்பாளராக அனுப்பப்பட்டார். முதலில் அவர் பாண்டிச்சேரியில் வந்திறங்கினார். அங்கு ஆறு வாரங்கள் தங்கியபிறகு சென்னை சென்றார். பின்னர் பாண்டிச்சேரியிலிருந்து கப்பலேறி நவம்பர் 1776இல் கொச்சி சென்று சேர்ந்தார். அங்கு அவர் 1789 வரை கீழைநாட்டியல் ஆய்விலும் மறைபரப்புப் பணியிலும் ஈடுபட்டார். கார்மேல் சபையின் முதன்மைக் குருவாகவும் திருத்தூதுப் பார்வையாளராகவும் செயல்பட்டார். அவர் பல மொழிகளில் தேர்ச்சிபெற்ற மொழியியல் வல்லுநர். அவர் புலமை பெற்றிருந்த மொழிகள்: செருமானியம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், அங்கேரியம், இத்தாலியம், போர்த்துகீசியம், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், தமிழ் போன்ற இந்திய மொழிகள். மலபார் பகுதி மக்கள் அவரை "பவுலீனுஸ் பாதிரி" என்று அழைத்தார்கள்.
உரோமையில் கீழைநாட்டியல் ஆய்வு
தொகுபவுலீனுஸ் 1789ஆம் ஆண்டு உரோமை திரும்பினார். அவர் இந்தியாவில் தங்கி நிகழ்த்திய ஆய்வுகளின் தொகுப்பைப் பல நூல்களாக வெளியிட்டார். உரோமையில் இருந்தபோது பவுலீனுஸ் கர்தினால் ஸ்தேபனோ போர்ஜியா என்பவரின் ஆதரவைப் பெற்றார். அக்கர்தினால் தம் பிறப்பு நகரான வெல்லேத்ரி (Velletri) என்னும் இடத்தில் ஒரு சிறந்த கலைக்கூடத்தை நிறுவியிருந்தார். அவர் பவுலீனுசைத் தம் தனிச் செயலராக நியமித்து, அவருடைய ஆய்வுகளை வெளியிட நிதி உதவி நல்கினார்.
பவுலீனுஸ் 1790இல் உரோமையில் வெளியிட்ட சமசுகிருத இலக்கணம் Sidharubam seu Grammatica Samscrdamica (சித்தரூபம் அல்லது சமசுகிருத இலக்கணம்) என்னும் பெயரைக் கொண்டிருந்தது. 1794இல் Systema Brahmanicum (பிராமணிய அமைப்பு), India Orientalis Christiana, continens fundationes ecclesiarum, series episcopum, missiones, schismata, persecutiones, viros illustres (கிறித்தவ கீழை இந்தியா: கோவில்கள் நிறுவுகை, ஆயர் வரிசை, மறைப்பணித் தளங்கள், பிரிவினைகள், துன்புறுத்தல்கள், சான்றோர்). இந்நூல்கள் இலத்தீன் மொழியில் வெளியிடப்பட்டன.
இந்தியாவில் தாம் பெற்ற அனுபவங்களையும் ஆய்வு விவரிப்புகளையும் தொகுத்து பவுலீனுஸ் Viaggio alle Indie Orientali (கீழை இந்தியாவில் பயண அனுபவங்கள்) என்னும் தலைப்பில் 1796இல் இத்தாலிய மொழியில் வெளியிட்டார். அந்நூல் மிகப் பல ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு புகழ்பெற்றது (செருமானிய பதிப்பு: 1798; ஆங்கிலப் பதிப்பு: 1800). பிரஞ்சு மொழியில் 1806இல் வெளியானது.[7]
1800ஆம் ஆண்டு திருத்தந்தை ஏழாம் பயசு என்பவர் பவுலீனுசை உரோமை மறைபரப்புக் கல்லூரியில் ஆய்வு மேலாளராக நியமித்தார்.
மலபார் பகுதியில் மக்கள் தொகை
தொகுபவுலீனுசின் கார்மேல் சபையில் மலபார் பிரதேசம் தெற்கே கன்னியாகுமரியிலிருந்து வடக்கே கன்னட நிலப் பகுதிவரை விரிந்திருந்தது. பவுலீனுஸ் தமது இந்தியப் பயண அனுபவங்களின் அடிப்படையில் மலபார் பிரதேசத்தின் மக்கள் தொகையைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
- 1771இல் புனித தோமா கிறித்தவர்கள்: 94,600 பேர்.
- 1780இல் அக்கிறித்தவர்கள் வரிகொடுக்கும் பட்டியலை தயாரித்தபோது தம் மக்கள் எண்ணிக்கை 100,000 என்று கணித்தார்கள்.
- திப்பு சுல்தான் படையெடுப்பின்போது மலபார் பிரதேசத்தில் 10,000 கிறித்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.
- எனவே, 90,000 சீரோ-கல்தேய கத்தோலிக்க கிறித்தவர் இருந்தார்கள்.
- அவர்களுக்கு 64 கோவில்கள் இருந்தன. அவற்றுள் சிலவற்றை திப்பு சுல்தான் அழித்தார்.
- யாக்கோபைட் பிரிவினை சபையினர்: 50,000 பேர். அவர்களுக்கு 32 கோவில்கள் இருந்தன.
- முக்குவர், பரவர் ஆகிய கத்தோலிக்க கிறித்தவர்களுக்கு 75 கோவில்கள் இருந்தன.
- இலத்தீன் கிறித்தவர்களுக்கு 20 கோவில்கள் இருந்தன.
- இவ்வாறு மொத்தம் 100,000 கத்தோலிக்க கிறித்தவர்கள் இருந்தனர்.
- யூதர்கள்: 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் பேர்.
- அராபியர்கள்: 9ஆம் நூற்றாண்டிலிருந்தே குடியேறியவர்கள். எண்ணிக்கை: 100,000.
- அண்டை நாட்டினர்: 30,000 பேர்.
- ஐரோப்பியர்கள், கலப்பு இனத்தினர், துபாசிகள்: 15,000 பேர்.
- ஆக மொத்தம் 400,000 பேர்.
- முதற்குடி மக்கள்: 1,60,000 பேர்.
- இவ்வாறு மலபார் பிரதேசத்தில் மொத்தம் 2 மில்லியன் மக்கள் வாழ்ந்தார்கள்.
ஆர்னோஸ் பாதிரியின் படைப்புகளை அறிமுகப்படுத்தல்
தொகுபவுலீனுஸ் ஐரோப்பாவில் ஆர்னோஸ் பாதிரி என்று மலபார் பகுதியில் அழைக்கப்பட்ட Johann Ernst Hanxleden என்னும் அறிஞரின் படைப்புகளை அறிமுகப்படுத்தினார். ஆர்னோஸ் பாதிரியின் படைப்புகள் சிலவற்றை பவுலீனுஸ் தம்மோடு ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றார். அவருடைய எழுத்துகளிலிருந்து பல பகுதிகளைத் தம் நூல்களில் மேற்கோள் காட்டுகின்றார்.
கர்தினால் போர்ஜியா
தொகுபவுலீனுசின் புரவலராக இருந்த கர்தினால் போர்ஜியா திருத்தந்தை ஏழாம் பயசோடு நெப்போலியனைச் சந்திக்கப் போன வழியில் லியோன் நகரில் திடீரென 1804 நவம்பரில் இறந்துபோனார். அவரது மறைவின் பின்னணியில் பவுலீனுஸ் அவரைப் பற்றி உருக்கமான வரலாறு ஒன்றினை எழுதினார்.[8][9]
இறப்பு
தொகுதம் புரவலரான கர்தினால் போர்ஜிய இறந்த இரு ஆண்டுகளுக்குள் பவுலீனுஸ் தமது 58ஆம் வயதில், 1806, சனவரி 7ஆம் நாள் உயிர்துறந்தார்.
பவுலீனுஸ் ஆக்கிய படைப்புகள்
தொகுகீழை நாட்டியல் மற்றும் மொழியியலில் தேர்ச்சி பெற்ற அறிஞராக விளங்கிய பவுலீனுஸ் பல நூல்களை வெளியிட்டார்:
- "Systema brahmanicum liturgicum, mythologicum, civile, ex monumentis indicis musei Borgiani Velitris dissertationibus historico-criticis illustratum" (Rome, 1791), translated into German (Gotha, 1797);
- "Examen historico-criticum codicum indicorum bibliothecae S. C. de Propaganda" (Rome, 1792);
- "Musei Borgiani Velitris codices manuscripti avences, Peguani, Siamici, Malabarici, Indostani ... illustrati" (Rome, 1793);
- "Viaggio alle Indie orientali" (Rome, 1796), translated into German by Forster (Berlin, 1798);
- "Sidharubam, seu Grammatica sanscridamica, cui accedit dissert. hiss. crit. in linguam sanscridamicam vulgo Samscret dictam" (Rome, 1799), another edition of which appeared under the title "Vyacaranam" (Rome, 1804);
- "India orientalis christiana" (Rome, 1794), an important work for the history of missions in India. Other works bear on linguistics and church history.
- Paolino da San Bartolomeo, Viaggio alle Indie Orientali umiliato alla Santita di N. S. Papa Pio Sesto pontefice massimo da fra Paolino da S. Bartolomeo carmelitano scalzo, Roma, presso Antonio Fulgoni, 1796.
- Paolino da San Bartolomeo, Voyage aux Indes Orientales, par le p. Paulin de S. Barthelemy, missionnaire; traduit de l'italien ... avec les observations de Mm. Anquetil du Perron, J. R. Forster et Silvestre de Sacy; et une dissertation de M. Anquetil sur la proprieté (in lingua francese), A Paris, chez Tourneisen fils, libraire, rue de Seine, n 12, 1808.
- Paulinus a S. Bartholomaeo, Amarasinha. Sectio prima de caelo ex tribus ineditis codicibus indicis manuscriptis curante P. Paulino a S. Bartholomaeo ... (in lingua Latina), Romae, apud Antonium Fulgonium, 1798.
- Paulinus von Heilig Bartholomaus, Atlas pour servir au voyage aux Indes orientales. Par le p. Paulin de Saint-Barthelemy, missionaire (in lingua francese), A Paris, chez Tourneisen fils, 1808.
- Paulinus a S. Bartholomaeo, De basilica S. Pancratii M. Christi disquisitio. Auctore P. Paulino a S. Bartholomaeo (in lingua Latina), Romae, apud Antonium Fulgonium, 1803.
- Paulinus a S. Bartholomaeo, Dissertation on the Sanskrit language, Paulinus a S. Bartholomaeo (in lingua inglese), a reprint of the original Latin text of 1790, together with an introductory article, a complete English translation, and an index of sources by Ludo Rocher, Amsterdam, J. Benjamin, 1977.
- Paulinus a S. Bartholomaeo, Examen historico criticum codicum indicorum bibliothecae Sacrae Congregationis de propaganda fide (in lingua Latina), Romae, ex typ. S. C. de Propaganda Fide, 1792.
- Paulinus a S. Bartholomaeo, India orientalis christiana continens fundationes ecclesiarum, seriem episcoporum, Auctore P. Paulino a S. Bartholomaeo carmelita discalceato (in lingua Latina), Romae, typis Salomonianis, 1794.
- Paulinus a S. Bartholomaeo, Jornandis vindiciae de Var Hunnorum auctore p. Paulino a S. Bartolomeo carmelita discalceato ... (in lingua Latina), Romae, Apud Antonium Fulgonium, 1800.
- Paolino da San Bartolomeo, Monumenti indici del Museo Naniano illustrati dal P. Paolino da S. Bartolomeo (in lingua Latina), In Padova, nella Stamperia del Seminario, 1799.
- Paulinus a S. Bartholomaeo, Mumiographia Musei Obiciani exarata a P. Paulino a S.Bartholomaeo carmelita discalceato (in lingua Latina), Patavii, ex Typographia Seminarii, 1799.
- Paulinus a S. Bartholomaeo, Musei Borgiani Velitris codices manuscripti Avenses Peguani Siamici Malabarici Indostani animadversionibus historico-criticis castigati et illustrati accedunt monumenta inedita, et cosmogonia Indico-Tibetana, auctore p. Paulino a S. Bartholomaeo ... (in lingua Latina), Romae, apud Antonium FUgonium, 1793.
- Paulinus a S. Bartholomaeo, Sidharubam seu Grammatica Samscrdamica. Siddarupam. Cui accedit Dissertatio historico-critica in linguam Samscrdamicam vulgo Samscret dictam, in qua huius linguae exsistentia, origo, praestantia, antiquitas, extensio, maternitas ostenditur, libri aliqui ea exarati critice recensentur, & simul aliquae antiquissimae gentilium orationes liturgicae paucis attinguntur, & explicantur auctore Fr. Paulino a S. Bartholomaeo ... (in lingua Latina), Romae, ex typographia Sacrae Congregationis de Propaganda Fide, 1790.
- Paulinus a S. Bartholomaeo, Systema Brahmanicum liturgicum mythologicum civile ex monumentis Indicis musei Borgiani Velitris dissertationibus historico-criticis illustravit fr. Paullinus a S. Bartholomaeo carmelita discalceatus Malabariae missionarius Academiae Volscorum Veliternae socius (in lingua Latina), Romae, apud Antonium Fulgonium, 1791.
- Paulinus a S. Bartholomaeo, Vitae synopsis Stephani Borgiae S.R.E. cardinalis amplissimi S. Congr. De Propaganda fide praefecti curante p. Paulino a S. Bartholomaeo carmelita discalceato ... (in lingua Latina), Romae, apud Antonium Fulgonium, 1805.
- Paulinus a S. Bartholomaeo, Vyacarana seu Locupletissima Samscrdamicae linguae institutio in usum Fidei praeconum in India Orientali, et virorum litteratorum in Europa adornata a P. Paulino a S. Bartholomaeo Carmelita discalceato (in lingua Latina), Romae, typis S. Congreg. de Propag. Fide, 1804.
- Paulinus a S. Bartholomaeo, Notitia topographica, civilis, politica, religiosa missionis Malabaricae ad finem saeculi 18. / auctore r. P. Paulino a S. Bartholomaeo, O. C. D (in lingua Latina), Romae, apud Curiam generalitiam, 1937, Tip. A. Manuzio.
- Paulinus of St. Bartholomew: De manuscriptis codicibus indicis R. P. Joan Ernesti Hanxleden epistola ad. R. P. Alexium Mariam A. S. Joseph Carmelitam excalceatum, Vienna, 1799.
குறிப்புகள்
தொகு- ↑ "Academic Dictionaries and Encyclopedias - Paulinus of St. Bartholomew". en.academic.ru. பார்க்கப்பட்ட நாள் 2012-02-12.
- ↑ Paulinus a S. Bartholomaeo, Paolino da San Bartolomeo; known as Paulinus Paathiri; secular name Johann Philipp Wesdin.
- ↑ "PAULINUS A SANCTO BARTHOLOMAEO, [Johannes Philippus Werdin or Wesdin].India Orientalis Christiana continens fundationes ecclesiarum, seriem episcoporum, missiones, schismata, persecutiones, reges, viros illustres". Horden House. Archived from the original on 2013-01-25. பார்க்கப்பட்ட நாள் 2012-02-13.
Paulinus a S. Bartholomaeo (1748-1806).....He was the author of many learned studies on the east, and published the first Sanskrit grammar
- ↑ "Sidharubam seu grammatica Samscrdamica cui accedit dissertatio historico-critica in languam samscrdamicam vulgo samscret dictam by Paulinus a S. Bartholomaeo". National Book Auctions.com. Archived from the original on 2014-05-29. பார்க்கப்பட்ட நாள் 2012-02-12.
- ↑ "Results from NBA's January Auction". finebooksmagazine.com. பார்க்கப்பட்ட நாள் 2012-02-12.
Philip Werdin (or Wesdin) was an Austrian Carmelite missionary in Malabar from 1776 to 1789. An outstanding Orientalist, he was one of the first to remark upon the close relationship between Indian and European languages
[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "British Library - Mss Eur K153 - PAULINUS, a Sancto Bartholomaeo". bl.uk. பார்க்கப்பட்ட நாள் 2012-02-13.
A copy of `Systema Brahmanicam' (Rome 1791) by Fr Paolino (Paulinus, a Sancto Bartholomaeo [Joannes Philippus Werdin or Wesdin]), containing critical comments possibly by Sir William Jones (1746-94), oriental scholar, Judge of Supreme Court, Calcutta 1783-94
- ↑ 7.0 7.1 Gorton, John (1833). A general biographical dictionary. Whittaker and Co. பார்க்கப்பட்ட நாள் 2012-02-12.
- ↑ Vitae synopsis Stephani Borgiae S.R.E. cardinalis amplissimi S. Congr. De Propaganda fide praefecti curante p. Paulino a S. Bartholomaeo carmelita discalceato. Romae, apud Antonium Fulgonium, 1805
- ↑ Carlo Gastone della Torre di Rezzonico, Lettera su' monumenti indici del Museo Borgiano illustrati dal padre Paolino di San Bartolomeo in Opere del cavaliere Carlo Castone conte Della Torre di Rezzonico patrizio comasco raccolte e pubblicate dal professore Francesco Mocchetti, Como, presso lo stampatore provinciale Carlantonio Ostinelli, 1820, Tomo VIII, p. 7-54
ஆதாரங்கள்
தொகு- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது: "Paulinus a S. Bartholomaeo". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன். The entry cites:
- Giuseppe Barone, Vita, precursori ed opere del P. Paolino da S. Bartolommeo (Filippo Werdin) : contributo alla storia degli studi orientali in Europa (Napoli: A. Morano, 1888);
- Max von Heimbucher, Die Orden und Kongregationen der katholischen Kirche, II (2nd ed., Paderborn: Schoningh, 1907), 568-69