புன்னாகவராளி

புன்னாகவராளி 8வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2வது சக்கரத்தின் 2வது மேளமாகிய தோடியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தின் எல்லை மந்திர காகலி நிஷாதத்திலிருந்து மத்திய கைசிகி நிஷாதம் வரை ஆகும். துவி அன்னிய சுர பாஷாங்க இராகம்.

ஆரோகணம்: நி2 ஸ ரி121 ப த1 நி2
அவரோகணம்: நி21 ப ம12 ரி1 ஸ நி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள்

தொகு
  • சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), காகலி நிஷாதம்(நி3) என்பன அன்னிய சுரங்களாகும்.
  • இந்த இராகத்தில் சௌக்க கால பிரயோகங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
  • கருணைச் சுவையை வெளிப்படுத்தும் இராகம். இரவில் பாடுவதற்கு மிகவும் பொருத்தமானது.
  • பாம்புகளை வசப்படுத்துவதற்கு மகுடியில் இந்த இராகமே இசைக்கப்படுகின்றது. எனவே இந்த இராகத்திற்கு மோடி என்ற பெயரும் உண்டு.
  • இந்த இராகத்திலிருந்து நொண்டிச் சிந்து என்ற கிராமிய மெட்டும், ஓடம் என்ற மெட்டும் தோன்றியுள்ளன.
  • பழைமையான இராகம்.

உருப்படிகள் [1]

தொகு
  1. திவ்வியநாமக்கீர்த்தனை : "தவதாசோகம்" - ஆதி - தியாகராஜர்
  2. கிருதி : "ஏனோமு" - ரூபகம் - தியாகராஜர்
  3. கிருதி : "கனக சைல" - ஆதி - சியாமா சாஸ்திரிகள்
  4. கிருதி : "ஆடுபாம்பே" - ஆதி - பாம்பாட்டிச் சித்தர்
  5. கிருதி : "ஏஹி அன்னபூர்ண" - ஆதி - முத்துசுவாமி தீட்சிதர்
  6. கிருதி : "தள்ளுவாரோ" - ரூபகம் - கோபாலகிருஷ்ண பாரதியார்
  7. நொண்டிச் சிந்து : "பழன மருங்கணையும்" - ஆதி - கோபாலகிருஷ்ண பாரதியார்.
  8. பதம் : "நின்னுஜூடை" - திருபுடை - சேத்ரக்ஞர்

மேற்கோள்கள்

தொகு
  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.

வெளியிணைப்புகள்

தொகு
  • யூடியூபில் நிகழ்படம் - முத்துசுவாமி தீட்சிதர் எழுதிய ஏஹி அன்னபூர்ண எனும் பாடல், அருணா சாயிராமின் குரலில்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்னாகவராளி&oldid=2161490" இலிருந்து மீள்விக்கப்பட்டது