புமிலியா
புதைப்படிவ காலம்:பிளான்கேன் முதல் இர்விங்டானியன், 4.75–1.8 Ma
பு. நோவாசெகி (மேலே) and பிரைனோசோமா மக்லெலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இகுயானிடே
பேரினம்:
†புமிலியா

நோரெல், 1989
இனம்:
பு. நோவாசெகி
இருசொற் பெயரீடு
புமிலியா நோவாசெகி
நோரெல், 1989

புமிலியா நோவாசெகி என்பது அழிந்துபோன ஒரு இகுவானிட் சிற்றினம் ஆகும். இது இப்போது கலிபோர்னியாவில் உள்ள பாம் இசுபிரிங்சு, பிளாங்கன் முதல் இர்விங்டோனியன் வரை பிளியோசீன் முதல் ஆரம்பக்கால பிளீசுடோசீன் வரை வாழ்ந்தது.

இது தற்போது ஓரளவு நசுக்கப்பட்ட மண்டை ஓட்டின் மூலம் அறியப்படுகிறது. இதன் மண்டை ஓட்டின் அம்சங்கள் அடித்தள இகுவானிய அம்சங்களைக் காட்டுகின்றன. மேலும் தற்போதுள்ள பேரோந்தி மிகவும் ஒத்த உயிரியாக உள்ளது. இது தற்பொழுது வாழும் விலங்கான இளம் பச்சைப் பேரோந்தி போல இருந்திருக்கலாம் என்று கூறுகிறது.

சொற்பிறப்பியல்

தொகு

புமிலியா என்ற பேரினப் பெயர், இலத்தீன் மொழியில் "குறைவானது" என்று பொருள்படும், உயிருள்ள விலங்கு எப்படி மிகச் சிறிய உடும்பு போல இருந்திருக்கும் என்பதை இது குறிப்பிடுகிறது. சிற்றினப் பெயர் மைக்கேல் ஜே. நோவாசெக், விவரிப்பாளரின் சக ஊழியரும் நண்பருமான மார்க் நோரெல் ஆகியோருக்கு மரியாதை அளிக்கும் விதமாகச் சூட்டப்பட்டது.

மேலும் பார்க்கவும்

தொகு
  • லபிடிகுவானா
  • பிராக்கிலோபஸ் கிப்பன்சி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புமிலியா&oldid=3755404" இலிருந்து மீள்விக்கப்பட்டது