புயலுக்குப் பெயரிடுதல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

புயலுக்குப் பெயரிடுதல் (Tropical cyclone naming) என்ற பழக்கத்தை முதன்முதலில் ஆஸ்திரேலியா நாட்டவர் தான் உருவாக்கினார்கள். வெப்ப மண்டலச் சூறாவளிகள் மற்றும் மிதவெப்ப மண்டலச் சூறாவளிகள் போன்றவற்றிற்கு பல எச்சரிக்கை மையங்களால் பெயர் சூட்டப்படுகின்றன. இதன் நோக்கம் புயல் வானிலை எச்சரிக்கை மையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான முன்னறிவிப்பு, எச்சரிக்கை போன்றவை குறித்த எளிதான தகவல் தொடர்பேயாகும். இந்தப் பெயர்கள் வெப்ப மண்டலச் சூறாவளி படுகைகளில் உடனுக்குடன் நிகழ்கின்ற புயல்கள் பற்றிய தகவல்களில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பொதுவாக, புயல்கள் 33 கடல் மைல்கள் (61 கி.மீ/மணி; 38 மைல்/மணி) என்ற அளவிற்கு மேலான நீடித்த காற்றின் வேகத்தைக் கொண்டிருந்தால் அவை உருவாகும் படுகையைக் குறித்து முன்னரே தீர்மானித்து வைக்கப்பட்ட பெயர்ப்பட்டியலில் இருந்து ஒரு பெயரானது இவ்வாறான புயல்களுக்குச் சூட்டப்படுகிறது.[1] சில வெப்ப மண்டலத் தாழ்வு மண்டலங்கள் மேற்கு பசிபிக் பகுதியில் பெயரிடப்பட்டுள்ளன. அதே சமயம் வெப்ப மண்டலச் சூறாவளிகள் அவைகள் பெயரிடுவதற்கு முன்னதாக தெற்கு அரைக்கோளத்தில் குறிப்பிட்ட காற்றின் வேகத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

வெப்பமண்டலச் சூறாவளிகளுக்கு தனிப்பட்ட (முதல்) பெயர்களை வழங்குவது வழக்கமான நடைமுறையாக மாறுவதற்கு முன்பு, அவை நிகழ்ந்த இடங்கள், பொருள்கள் அல்லது புனிதர்களின் பண்டிகை நாள்களைக் கொண்டு பெயரிடப்பட்டன. இவ்வாறு சூறாவளிகளுக்குப் பெயரிடும் முறையை உருவாக்கியமைக்கான பெருமை குயின்ஸ்லாந்து அரசின் வானலை முன்னறிவிப்பு மையத்தைச் சார்ந்த வானிலை ஆராய்ச்சியாளர் கிளெமன்ட் ராக் என்பவரையே சாரும். இவரே 1887 முதல் 107 வரையிலான காலத்தில் இவ்வாறான பெயரிடும் முறையைப் பின்பற்றினார். ராக் பணி ஓய்வு பெற்ற பிறகு இந்த முறையானது மேற்கு பசிபிக் மண்டலத்தில் இரண்டாம் உலகப் போரின் பிந்தைய காலம் வரை பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்படாமல் இருந்து பின் புத்துயிர் பெற்றது. கிழக்கு, மத்திய, மேற்கு மற்றும் ஆஸ்திரேலிய பகுதி , அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் தெற்கு பசிபிக் படுகைகள் மற்றும் பசிபிக் சூறாவளி ஆகியவற்றில் பெரும் புயல்களுக்கு முறையான பெயரிடும் திட்டங்கள் மற்றும் பட்டியல்கள் பின்னர் பயன்படுத்தப்பட்டன. 1950க்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டத் தொடங்கியது. கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒவ்வொரு மண்டலத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கக் கடல் மற்றும் அரபிக்கடல் உருவாகும் புயல்களுக்கு இந்திய மண்டலத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைத்தனர்.[2] 2014 ஆம் ஆண்டின் நிலவரப்படி, வெப்பமண்டலச் சூறாவளிகள் பதினொரு எச்சரிக்கை மையங்களில் ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டு, பொது மக்களுக்கு முன்னறிவிப்புகள் மற்றும் புயல் தொடர்பான ஆபத்துகளை திறம்பட தொடர்புகொள்வதற்கு வசதியாக அவற்றின் வாழ்நாள் முழுவதும் பெயர்களை வைத்திருக்கிறது.[3]

இந்திய மண்டல நாடுகள்

தொகு

2000 ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு ஆசிய பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் படி மாநாட்டில் 8 நாட்டினர் 64 பெயர்களைக் கொண்ட புயல் பட்டியலைத் தயாரித்தன. 8 நாடுகளின் புயல் பட்டியல் சுழற்சி முறையில் பெயர் வைக்கப்படுகிறது. இந்தியா, பாக்கித்தான், இலங்கை வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன் மற்றும் தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் வங்கக்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டப்பட்டு வருகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தொகு
  • கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவது.
  • மீனவர்கள் கடலுக்குச் செல்லத்தடை.
  • கட்டுப்பாட்டு அறை.

மேற்கோள்கள்

தொகு
  1. "Tropical Cyclone Operational Plans". community.wmo.int. பார்க்கப்பட்ட நாள் 2024-07-31.
  2. Dorst, Neal M (October 23, 2012). "They Called the Wind Mahina: The History of Naming Cyclones" (PPTX). Hurricane Research Division, Atlantic Oceanographic and Meteorological Laboratory. National Oceanic and Atmospheric Administration. Slides 8–72.
  3. Landsea, Christopher W; Dorst, Neal M (June 1, 2014). "Subject: Tropical Cyclone Names: B1) How are tropical cyclones named?". Tropical Cyclone Frequently Asked Question. United States National Oceanic and Atmospheric Administration's Hurricane Research Division. Archived from the original on December 10, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புயலுக்குப்_பெயரிடுதல்&oldid=4056725" இலிருந்து மீள்விக்கப்பட்டது