புரத நைத்திரசன் அலகு
புரத நைத்திரசன் அலகு (Protein nitrogen unit) ஒவ்வாமை தோல் சோதனைகளில் பயன்படுத்தப்படும் சேர்மங்களின் ஆற்றலை அளவிடுகிறது. அளவிடப்படும் ஆற்றலின் அலகு 0.01 மீநுண்கிராம் பாசுப்போதங்குசிடிக் அமிலம் வீழ்படிவாக்கும் புரத நைத்திரசன் அளவுக்கு சமமானதாகும்.[1] ஆற்றல் அளவீடுகள் அளவீட்டு நுட்பத்தைப் பொறுத்ததாகும். எனவே வெவ்வேறு உற்பத்தியாளர்களின் முடிவுகளை நம்பத்தகுந்த வகையில் ஒப்பிட முடியாது. இதன் விளைவாக புரத நைத்திரசன் அலகுகள் உயிர் சமத்துவ ஒவ்வாமை அலகுகளாக மாற்றப்படுகின்றன. நிலையான ஆற்றல் குறிக்கும் தயாரிப்புகளைப் பயன்படுத்தி தோல் சோதனை மூலம் இவை அளவிடப்படுகின்றன. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ May, JC; Sih, JT; Best, J; Douglas, G; Rancour, JM; Renker, HR; Spingola, F; Van Daele, L et al. (November 1981). "Protein nitrogen unit precipitation procedure for allergenic extracts: collaborative study". J Assoc off Anal Chem 64 (6): 1435–8. பப்மெட்:7309663. Site is an abstract provided by PubMed
- ↑ Ross, Rowlett (2002). "P". How Many? A Dictionary of Units of Measurement. University of North Carolina at Chapel Hill. பார்க்கப்பட்ட நாள் 2009-02-05.