புராணம் (வைணவ புராணங்கள்)
புராணம் என்னும் சொல் பழங்கதைகளைக் குறிக்கும். தமிழில் வைணவ சமயம் தொடர்பான புராணங்கள் ஐந்து உள்ளன. அவற்றின் காலக் குறிப்புடன் பட்டியலிட்டுப் பகுத்துத் தருகிறது இந்த அட்டவணை.
எண் | புராண வகை | புராணம் | ஆசிரியர் | பாடல் | காலம் |
---|---|---|---|---|---|
1 | இதிகாசம் | பாகவதம் | செவ்வை சூடுவார் | 4971 | 1550-1575 |
2 | இதிகாசம் | பாகவதம் | அருளாள தாசர் | 9147 | 1543 |
3 | தல புராணம் | திருக்குருகை மான்மியம் | திருக்குருகைப் பெருமாள் கவிராயர் | 3030 | 1548 |
4 | தல புராணம் | கூடற் புராணம் | தெரியவில்லை | 747 | 1575-1600 |
5 | சமயவாதம் | இருசமய வாதம் | அரிதாசர் | 2139 | 1500-1525 |
இவற்றையும் காண்க
தொகுகருவி நூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005