புரா மாஸ்பகித், பாலி

புரா மாஸ்பகித் (Pura Maospahit) என்பது இந்தோனேசியாவில், பாலியில் டென்பசார் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு பாலினிய இந்துக் கோயில் ஆகும். இந்தக் கோயிலானது அதன் வெற்று சிவப்பு செங்கல்லால் ஆன கட்டடத்தில் அமைந்த கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது, இது 13 ஆம் நூற்றாண்டின் மஜாபஹித் இராச்சியத்தின் கட்டிடக்கலையை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளதால் அது அப்பெயரைப் பெற்றது. புரா மாஸ்பகித் பஞ்சா மண்டலா என்று அழைக்கப்படும் ஒரு கருத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டது ஆகும். அதாவது இந்த அமைப்பில் புனிதமான இடம் என்பதானது மலையின் திசையை நோக்கி அமையாமல் நடுவில் அமைந்திருக்கும். [1]

வரலாறு

தொகு

புரா மாஸ்பகித்தின் வரலாறு பலாத் வாங்கயா தலீம் எனப்படுகின்ற ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டள்ளது. அதில் பாலினிய சமய கட்டிடக்கலை சார்ந்த கட்டிடக் கலைஞரான ஸ்ரீ கோபோ இவாவின் கதை குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ரராஸ் மாஸ்பகித் என்னும் ஒரு கோயிலை 1200 சாகா ஆண்டில் (அல்லது 1278 கிரிகோரியன் காலண்டர்) கட்டினார். ரராஸ் மாஸ்பகித் என்பதானது செங்கல் கட்டுமானத்தைக் கொண்டு அமைந்துள்ள ஒரு சன்னதி என்றும், அதன் நுழைவாயிலில் இரு புறமும் டெர்ரகோட்டா சிலைகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அது ஒரு கோயில் என்று குறிப்பிடப்பட்டள்ளது. தற்போது சிவப்பு செங்கல் கட்டிடம் ரராஸ் மாஸ்பகித் இன்றும் உள்ளது அது புரா மாஸ்பகித் கோயில் வளாகத்தின் முதன்மைக் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது. [1]

டென்பசாரில் பதுங் இராச்சியத்தின் ஆட்சிக் காலத்தின் போது, பாசெக் என்ற கட்டிடக் கலைஞர் வேயாங் வழிபாட்டு முறைக்காக மற்றொரு கோயிலைக் கட்டும்படி பணிக்கப்பட்டார். கட்டுமானப் பணித் தொடங்குவதற்கு முன்பு, புதிய சன்னதியின் சரியான விகிதத்தைப் பற்றி அறிந்து வருவதற்காக அவர் மஜாபகித்துக்கு அனுப்பப்பட்டார். புதிய கோயிலின் வடிவமைப்பை முடித்த பின்னர், அவர் டென்பசருக்குத் திரும்பி, ரராஸ் மாஸ்பாகித் என்று அழைக்கப்படும் புதிய சன்னதியை 1475 சாகா ஆண்டில் (அல்லது ஆண்டு 1553) கட்டினார். இந்த கட்டிடம் முந்தைய ரராஸ் மாஸ்பகித்தின் அருகில் உள்ளது. [1]

இவ்வகையான முறையினை மஜாபகித்தில் இருந்த பண்டைய கோயில்களில் காணலாம். அல்லது இம்முறையை பண்டைய ஜாவாவில் இருந்த கிராட்டன் அரண்மனைகளில் காணமுடியும். புரா மாஸ்பகித்தினைச் சுற்றி ஐந்து மண்டலங்கள் அமைந்துள்ளன. பஞ்ச மண்டலம் என்பது ஐந்து மண்டலம் என்று பொருள்படும். முதல் மண்டலம் முதன்மைச் சன்னதிக்கு மேற்குப் புறத்தில் அமைந்துள்ளது. இரண்டாவது மண்டலம் முதன்மைச் சன்னதிக்கு தெற்கு புறத்தில் அமைந்துள்ளது. மூன்றாவது மண்டலம் ஜபா சிசி என்றக்கப்படுகிறது. அது முதன்மைச்சன்னதியின் மேற்குப்புறத்தில் உள்ளது. நான்காவது மண்டலம் ஜபா டென்கா எனப்படுகிறது. அதற்கு பெந்தர் கோயில் வழியாகச் செல்லமுடியும். ஐந்தாவது மண்டலம் ஜீரோ அல்லது உதமானிங் மண்டலம் அல்லது முதன்மை மண்டலம் எனப்படுகிறது. அந்த ஐந்தாவது மண்டலம்தான் மிகவும் புனிதமான மண்டலமாகக் கருதப்டுகிறது. அங்குதான் பெரும்பாலான முதன்மைச்சன்னதிகள் உள்ளன. [1]

கோயில் வளாகம்

தொகு
 
நடுவிலுள்ள கருவறைக்குச் செல்வதற்கான, பிரிந்த நிலையில் அமைந்த நுழைவாயில்

பஞ்ச மண்டலா என்ற கருத்துருவின்படி பாலியில் அமைக்கப்பட்ட ஒரே கோயில் என்ற பெருமையினை இது பெறுகிறது. மலையின் திசையில் மிகவும் புனிதமான உள் கருவறை ( ஜீரோ ) உள்ளது. மலையை நோக்கிய வண்ணம் அது உள்ளது. [2] [3]

.

கோயில் திருவிழா

தொகு

கோயிலின் இரு ஆண்டு பியோடலன் / பூஜாவளி திருவிழா ஒவ்வொரு பூர்ணாமா ஜெயஸ்தா ராது அயு மாஸ் மாஸ்பகித்தை கௌரவிப்பதற்காகவும், ஒவ்வொரு பூர்ணமா காளிமா ஐடா படாரா லிங்சீர் சக்தியைக் கௌரவிப்பதற்காகவும் நடத்தப்படுகிறது. [1]

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரா_மாஸ்பகித்,_பாலி&oldid=2878172" இலிருந்து மீள்விக்கப்பட்டது