புருடென்சு போன்காம்
ஆத்திரேலிய கடல் உயிரியலாளர்
புருடென்சு போன்காம் (Prudence Bonham) (பிறப்பு 1948) ஓர் ஆத்திரேலிய முன்னாள் அரசியல்வாதி மற்றும் கடல் உயிரியலாளர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை ஓபார்ட்டு நகராட்சி சபையின் ஆல்டர்மேன் எனப்படும் உறுப்பினராக இருந்தார். 1994 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை ஓபார்ட்டு நகரத்தின் லார்டு மேயர் எனப்படும் துணை நகரத் தந்தையாகவும் இருந்தார்[1][2] . பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு நிறுவனத்திற்காக போன்காம் ஒரு கடல் உயிரியலாளராக 26 ஆண்டுகள் பணியாற்றினார்[3].ஆத்திரேலிய பிராந்தியத்திலும் அண்டார்டிக்கிலும் பல்வேறு கடல் பயணங்களில் இவர் பங்கேற்றுள்ளார்[1]. 2013 ஆம் ஆண்டு போன்காம் பெண்கள் தாசுமேனியப் பெண்கள் மரியாதைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்[1].
முழுப் பெயர் | புருடென்சு போன்காம் Prudence Bonham |
---|---|
பிறப்பு | 1948 (அகவை 75–76) சிட்னி, ஆத்திரேலியா |
பிரதான விருப்பு | கடல் உயிரியல் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Tasmanian Honour Roll of Women". www.dpac.tas.gov.au. Archived from the original on 2019-07-29. பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
- ↑ "Australian Local Government Women's Association, Tasmanian Branch". www.algwatas.net.au.
- ↑ "Prudence Bonham's research works | CSIRO Marine And Atmospheric Research, Hobart and other places". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-31.