புரு (புராண விலங்கு)

அபாதனி மக்களின் புராண விலங்கு

புரு (Buru) அல்லது புரா என்பது அபதானி மக்களின் அடித்தள புராணத்தில் இடம்பெற்றுள்ள ஒரு நீர்வாழ் விலங்கு ஆகும்.[1] அருணாச்சலப் பிரதேசத்தின் சிரோ பள்ளத்தாக்கில் தற்போது இருக்கும் இடத்திற்கு அபதானிகளின் இடம்பெயர்வு பற்றிய கதைகள், பள்ளத்தாக்கில் முதலை போன்ற ஆபத்தான உயிரினங்கள் வாழும் ஒரு சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதைக் கூறுகின்றன.[2] பள்ளத்தாக்கில் குடியேறி சதுப்பு நிலத்தை வடிகட்டுவது, உயிரினங்களை அழிப்பது, வளமான நெல் வயல்களை பயிரிடுவது போன்றவற்றைச் செய்துவருகின்றனர்.

புரு
(புரா, புரோ, புரு)
நாடுஇந்தியா
பிரதேசம்அருணாசலப் பிரதேசம்
வாழ்விடம்சதுப்புநிலம்

1945 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில், ஜேம்ஸ் பிலிப் மில்சு மற்றும் சார்லஸ் இசுடோனர் ஆகியோர் அபதானி மக்களிடமிருந்து புரு பற்றிய விவரங்களை சேகரித்தனர். அபதானி பெரியவர்களின் கூற்றுப்படி, அவர்களின் முன்னோர்கள்சிரோ பள்ளத்தாக்குக்கு குடிபெயர்ந்தபோது, பள்ளத்தாக்கு முதன்மையாக புரு வாழ்ந்துவந்த சதுப்புநிலமாக இருந்தது. அபதானி மக்கள் பள்ளத்தாக்கில் அதன் வளம் மற்றும் நல்ல தட்பவெப்பநிலை காரணமாக குடியேற முடிவு செய்தனர். ஆனால் அவ்வப்போது அவர்கள் புருக்களுடன் மோதல்களை எதிர்கொண்டார்கள். எனவே அவர்கள் அது வாழ்ந்த சதுப்பு நிலத்திலிருந்து வெளியேற்ற முடிவு செய்தனர். இதனால் அவர்கள் நெல் சாகுபடிக்காக சதுப்பு நிலங்களை வடிகட்டும்போது புருவை அகற்ற முடிவு செய்தனர்.[3] வடிகால் காரணமாக பெரும்பாலான புருக்கள் இறந்தன. மேலும் பல நிலத்தடி நீரூற்றுகளுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

1947 இல், பேராசிரியர் கிறித்தோபர் வான் பியூரர் ஐமண்டார்ப் புருவைப் பற்றி ஆரய்ந்த மற்றொரு மேற்கத்தியர். அந்த நேரத்தில், விலங்குகள் ஏற்கனவே பள்ளத்தாக்கில் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.[4]

கடைசி புரு ஒரு இளம் பெண்ணால் கண்டதாகக் கூறப்படுகிறது, ஒரு நாள் இரவில் அவள் தண்ணீர் எடுக்கும் போது அதை ஒரு நீரூற்றில் பார்த்து தனது தந்தையிடம் கூறினாள். அடுத்த நாள் முழு கிராமமும் கற்களாலும் களிமண்ணாலும் நீரூற்றை நிரப்பிவிட்டனர்.

சான்றுகள்

தொகு
  1. Blackburn, S. H. (2008). Himalayan tribal tales: Oral tradition and culture in the Apatani Valley. Brill. pp. 117–118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004171336. பார்க்கப்பட்ட நாள் January 19, 2020.
  2. "Apatani Cultural Landscape". UNESCO.
  3. George M. Eberhart (2002). Mysterious Creatures: A Guide to Cryptozoology. ABC-CLIO. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781576072837.
  4. The Apa Tanis and Their Neighbours: A Primitive Civilization of the Eastern Himalayas. Psychology Press. 2004. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415330473.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரு_(புராண_விலங்கு)&oldid=3655154" இலிருந்து மீள்விக்கப்பட்டது