புரூசு வின்சுட்டைன்
புரூசு வின்சுட்டைன் (Bruce Winstein) (செப்டம்பர் 25,1943 - பிப்ரவரி 28,2011) ஒரு சோதனை இயற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார் , அவர் அடிப்படை துகள் இயற்பியலில் தனது தொடக்கப் பணிக்காக குறிப்பிடப்படுகிறார் , குறிப்பாக, துகள்கள், அவற்றின் எதிர் துகள்களுக்கு இடையிலான சமச்சீரற்ற தன்மையை நிறுவுவதற்கான வேலைக்காகக் குறிப்பிடப்படுகிறார். அவரது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியில் , நுண்ணலை பின்னணி கதிர்வீச்சின் முனைமையை அளவிடும் செய்முறை அண்டவியலில் பணியாற்றினார் , அதன் பண்புகள் தொடக்க கால அண்டத்திற்கு முந்தையவை.[1]
புரூசு விசுட்டைன் Bruce Winstein | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 25, 1943 இலாசு ஏஞ்சலீசு |
இறப்பு | பெப்ரவரி 28, 2011 | (அகவை 67)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | செய்முறை இயற்பியலும் அண்டவியலும் |
பணியிடங்கள் | பிரின்சுட்டன், சிக்காகோ பல்கலைக்கழகம், பெர்மி ஆய்வகம் |
கல்வி | கலிபோர்னியா பல்கலைக்கழகம், இலாசு ஏஞ்சல்சு |
கல்வி கற்ற இடங்கள் | கால்டெக் |
விருதுகள் | W.K.H. பனோவ்சுகி பரிசு, செய்முறை துகள் இயற்பியல் |
தொழில் வாழ்க்கை
தொகுசெய்முறை அடிப்படை துகள் இயற்பியலில் ஒரு புகழ்பெற்ற தொடக்க வாழ்க்கைக்குப் பிறகு , வின்சுட்டைன் பிரின்சுட்டனில் ஓராண்டுக்குக் குகென்கெய்ம் ஆய்வுறுப்பினராக, பொதுவாக வானியற்பியலும் குறிப்பாக, நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சும் பற்றிப் படித்தார்.[2] பின்னர் அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் சாமுவேல் கே. அலிசன் கட்டில் பேராசிரியராகத் தனது பதவிக்கு திரும்பினார் , அங்கு அவர் அதன் NSF இயற்பியல் எல்லைப்புற மையத்தை அண்டவியல் இயற்பியலுக்காக நிறுவினார்.[3]
1999 ஆம் ஆண்டில் , அவர் பெர்மி ஆய்வக KTeV செய்முறையின் தலைவராக இருந்தார் , இது நேரடி CP மீறலுக்கான முதல் உறுதியான அடிப்படையை உருவாக்கியது. இது பொருள், பொருள் எதிர்ப்பில் சரியான இரட்டையர்கள் அல்ல என்பதற்கான முதன்மையான சான்றாகும்.[4] நுண்ணலைப் பின்னணி கதிர்வீச்சின் முனைமையை அளவிடுவதன் வழி தொடக்க அண்டத்தில் ஈர்ப்பு அலைகளைக் கண்டறிய முயன்ற பல ஆண்டு பன்னாட்டு ஒத்துழைப்பான QUIET செய்முறையின் தலைவராகவும் இருந்தார்.[4][5]
இவர் இலாசு ஏஞ்சலீசு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலிலும் கணிதத்திலும் அறிவியல் இளவல் பட்டமும் , 1970 இல் கால்டெக்கில் இருந்து முனைவர் பட்டமும் பெற்றார்.
வின்சுட்டைன் 1999 முதல் குகென்கெய்ம் ஆய்வுறுப்பினராக இருந்தார் , 2003 ஆம் ஆண்டில் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் ஆய்வுறுப்பினராக ஆனார்.[6]
வின்சுட்டைன் 1995 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் அறிவியல் கல்விக்கழகத்திலும் , 2007 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழகத்திலும் சேர்க்கப்பட்டார்.[7][8] 2007 ஆம் ஆண்டில் இவருக்கு அமெரிக்க இயற்பியல் கழகத்தால் செய்முறை துகள் இயற்பியலில் டபிள்யூ. கே. எச். பனோவ்சுகி பரிசு வழங்கப்பட்டது.
தகைமைகள்
தொகுவின்சுட்டைன் தேசிய அறிவியல் கல்விக்கழகம், அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழகம் ஆகிய இரண்டிலும் உறுப்பினராக இருந்தார்.[3] 2007 ஆம் ஆண்டில் அமெரிக்க இயற்பியல் கழகம் அவருக்கு செய்முறை துகள் இயற்பியலில் W. K. H. பனோவ்சுகி பரிசை பின்வரும் மேற்கோள்களுடன் வழங்கியது; "நடுநிலைக் கே மெசோன்களின் பண்புகளின் துல்லியமான அளவீடுகளின் தொடர்ச்சியான செய்முறைகளில் தலைமை வகித்ததற்காகவும் குறிப்பாக நேரடி CP மீறல் கண்டுபிடிப்புக்காகவும்" .
மேற்கோள்கள்
தொகு- ↑ Frisch, Henry; Rosner, Jonathan; Staggs, Suzanne (2012). "Obituary of Bruce Winstein (1943-2011)". Physics Today. doi:10.1063/PT.4.1768.
- ↑ Carroll, Sean. "Bruce Winstein". Discover blog "Cosmic Variance". பார்க்கப்பட்ட நாள் January 10, 2020.
- ↑ 3.0 3.1 "W.K.H. Panofsky Prize in Experimental Particle Physics". American Physical Society. பார்க்கப்பட்ட நாள் January 10, 2020.
- ↑ 4.0 4.1 "Bruce Winstein, physicist, 1943-2011". University of Chicago News. https://news.uchicago.edu/story/bruce-winstein-physicist-1943-2011. பார்த்த நாள்: January 10, 2020.
- ↑ "Q/U Imaging Experiment, Quiet". University of Chicago. பார்க்கப்பட்ட நாள் January 10, 2020.
- ↑ "Bruce Winstein". John Simon Guggenheim Memorial Foundation. பார்க்கப்பட்ட நாள் January 10, 2020.
- ↑ "Bruce Winstein" (PDF). National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் January 10, 2020.
- ↑ "Members of the American Academy Listed by election year, 2000-2019" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 10 January 2020.