புரெயில் கோட்டை
புரெயில் கோட்டை (Burail Fort) என்பது இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரமான சண்டிகர் நகரின் தற்போதைய 45 ஆவது பிரிவில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். முகலாயர் காலத்தில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது[1]. கி.பி 1712 ஆம் ஆண்டுவரையில் இக்கோட்டை ஃபாச்தார் எனப்படும் முகலாயக் காவல் அதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இக்காவல் அதிகாரி பொதுமக்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். புதியதாக திருமணம் செய்து கொண்ட மணப்பெண் ஒவ்வொருவரும் அவர்களுடைய கணவன்மார்களுடன் செல்வதற்கு முன் சிலநாட்கள் இவருடன் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். பொதுமக்கள் இவருக்கு எதிராக பண்டா பகதூர் எனப்படும் சீக்கிய படைத்தலைவரிடம் முறையிட்டனர். கல்சா இராணுவத்தை அனுப்பிய இவர் காவல் அதிகாரியையும் கொன்று கோட்டையையும் கைப்பற்றினார்.
புரெயில் கோட்டை Burail Fort | |
---|---|
பகுதி: சண்டிகர் | |
சண்டிகர், பிரிவு 45, ஒன்றியப் பகுதி, இந்தியா | |
புரெயில் கோட்டையின் தென்கிழக்கு திசை தூண் | |
ஆள்கூறுகள் | 30°25′21″N 76°27′14″E / 30.4226°N 76.4539°E |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | தனியார் |
மக்கள் அனுமதி |
உண்டு |
நிலைமை | நன்றாக இல்லை, பெரும்பாலான பகுதிகள் வசிப்பிடங்களாக விற்கப்பட்டன. |
இட வரலாறு | |
கட்டியவர் | முகலாயர் (ஆனால் பண்டா பகதூரால் பின்னாளில் கைப்பற்றப்பட்டது) |
கட்டிடப் பொருள் |
சிறியவகை செங்கற்கள்]] |
சண்டைகள்/போர்கள் | பண்டா பகதுரின் பஞ்சாப் படை முகலாயரின் ஃபாச்தார் படையுடன் போர் |
நிகழ்வுகள் | 1712 |
படக்காட்சியகம்
தொகு-
புரெயில் கோட்டை,சண்டிகர், வடகிழக்கு திசை தூண்
-
வடமேற்கு திசை தூண்
-
தென்மேற்கு திசை தூண்
-
பாழான நுழைவாயில்
-
பஞ்சாபி மொழியில் விரிவான வரலாறு
மேற்கோள்கள்
தொகு.