புரோகிரஸ் விண்கலம்

புரோகிரஸ் விண்கலம்
Progress spacecraft
Progress M-52.jpg
புரோகிரஸ் சரக்கு விண்கலம்
விவரம்
Role: ஆரம்பத்தில் சோவியத், ரஷ்ய விண்வெளி நிலையங்களுக்கும் (மீர்), பின்னர் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கும் தேவையான எண்ணெய், மற்றும் உபகரணங்களைக் கொண்டு செல்கின்றது.)
ஆட்கள்: 0
பரிமாணங்கள்
உயரம்: 23.72 அடி 7.23 மீ
விட்டம்: 8.92 அடி 2.72 மீ
கனவளவு: 7.6 மீ3
செயற்திறன்
தாங்குதிறன்: 6 மாதங்கள் நிலையத்துடன் இணைப்பில் இருந்தது

புரோகிரஸ் (Progress) என்பது ரஷ்ய சரக்கு விண்கலம் ஆகும். இது ஆளில்லா விண்கலம் ஆகும். ஆனாலும், விண்வெளி நிலையத்துடன் இது இணைந்து கொள்ளும் போது அதனுள் விண்வெளி வீரர்கள் சென்று தங்கியிருக்கும் வசதி படைத்தது[1][2][3]. இது சோயுஸ் விண்கலத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இவ்விண்கலம் சோவியத், மற்றும் ரஷ்ய விண்வெளி நிலையங்களுக்கு பொருட்களைக் கொண்டு சென்ன்றது, பின்னர் தற்போது பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு பொருட்களைக் கொண்டு செல்கிறது. ஆண்டு தோறும் மூன்று அல்லது நான்கு தடவைகள் இது பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு சென்று வருகிறது. ஒவ்வொரு புரோகிரஸ் விண்கலமும் மற்ற விண்கலம் வரும் வரை விண்வெளி நிலையத்துடன் இணைப்பில் இருக்கும். அடுத்து வரும் விண்கலம் இணைவதற்கு சற்று முன்பதாக நிலையத்தை விட்டு விலகும். விண்வெளி நிலையத்தில் எஞ்சியவற்றை சேர்த்துக் கொண்டு அது நிலையத்தை விட்டு விலகி பின்னர் வளிண்டலத்தில் அழிக்கப்படும்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோகிரஸ்_விண்கலம்&oldid=1350308" இருந்து மீள்விக்கப்பட்டது