புரோடீனெக்சட்

புரோடீனெக்சட் (PROteINSECT) திட்டம் என்பது ஐரோப்பிய ஒன்றிய முன்முயற்சி ஆகும். இத்திட்டத்தினை இங்கிலாந்தின் உணவு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் (ஃபெரா) ஒருங்கிணைக்கிறது. இத்திட்டமானது தொழில்முறை பண்ணையில் உணவில் புரத மாற்றாகப் பூச்சிகளைப் பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்குவதாகும். [1] [2]

2013 ஆம் ஆண்டில், புரோடீனெசெக்ட் ஒரு ஆய்வு அறிக்கையைத் தயாரித்தது.[2] இது ஐரோப்பிய ஒன்றியத்தில் விலங்குகளின் தீவனத்தில் தற்போதைய சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி பூச்சிகளைப் பயன்படுத்துவது தொடர்பானதாகும்.

புரோடீனெசெக்ட் கூட்டமைப்பு ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து 3 ஆண்டு (2013-2016) கூட்டாண்மையைக் கொண்டுள்ளது. இதில் தீவன தொழிலில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முதல் விவசாயிகள் மற்றும் கொள்கை மாற்றம் மற்றும் தகவல்தொடர்பு வல்லுநர்கள் வரை பங்கேற்றுள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Insects as Food: Why the Western Attitude Is Important", Annual Review of Entomology, Vol. 44: 21-50. 1999.DOI:10.1146/annurev.ento.44.1.21
  2. 2.0 2.1 "Work Package 5: Pro-Insect Platform - Deliverable 5.1", PROteINSECT

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோடீனெக்சட்&oldid=3596318" இலிருந்து மீள்விக்கப்பட்டது