புரோட்டான்பகுப்பு

புரோட்டான்பகுப்பு (Protonolysis) என்பது வேதிப்பிணைப்பில் அமிலங்களால் உருவாக்கப்படும் பிளவைக் குறிக்கும். முனைவு Mδ+-Rδ- பிணைப்பு இவ்வினைக்கு அவசியம் என்றாலும், கரிமவுலோக வேதியியலில் புரோட்டான் பகுப்பு வினைக்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. இங்குள்ள δ+ மற்றும் δ- என்பவை பிணைப்பில் ஈடுபடும் அணுக்களுடன் தொடர்புடைய பகுதி நேர் மின்சுமை மற்றும் பகுதி எதிர் மின்சுமையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. மேற்கண்டவகையிலான பிணைப்புகளைப் பெற்றுள்ள சேர்மங்கள் அமிலங்களுடன் (HX) வினைபுரியும் போது பிணைப்புகளில் பிளவு உண்டாகிறது.

M-R + HX → M-X + H-R

புரோட்டான் பகுப்பு வினையில் நீராற்பகுப்பு வினை (X− = OH−) சிறப்பிடம் பெறுகிறது. நீராற்பகுப்பு வினைக்கு ஏற்புடைய சேர்மங்கள் புரோட்டான் பகுப்பு வினைக்கும் உட்படுகின்றன.

ஐதரைடுகள்தொகு

போரோ ஐதரைடு எதிர்மின் அயனிகள் வலிமை குறைந்த அமிலங்களுடனுடம் வினைபுரிய ஏற்புடையனவாக உள்ளன. இதனால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட B-H பிணைப்புகளில் புரோட்டான் பகுப்பு வினை நிகழ்கிறது. சோடியம் போரோ ஐதரைடு அசிட்டிக் அமிலத்துடன் வினைபுரிந்து டிரையசிட்டாக்சிபோரோ ஐதரைடு உருவாதல் புரோட்டான் பகுப்பு வினைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும் :[1]

NaBH4 + 3 HO2CCH3 → NaBH(O2CCH3)3 + 3 H2:

இதேபோன்ற வினைகள் நேர்மின்சுமை தனிமங்களாக அறியப்படும் தனிமங்களின் ஐதரைடுகளில் நிகழ்கின்றன. உதாரணம்: இலித்தியம் அலுமினியம் ஐதரைடு.

ஆல்க்கைல்தொகு

பல உலோகங்களின் ஆல்க்கைல் வழிப்பொருட்கள் புரோட்டான் பகுப்பு வினைக்கு உட்படுகின்றன. மிகை நேர்மின் சுமை தனிமங்களாக அறியப்படும் துத்தநாகம், மக்னீசியம், இலித்தியம் போன்றவற்ரின் ஆல்க்கைல் வழிபொருட்களுக்கு தண்ணீரே வினைக்கு போதுமான அமிலமாக உள்ளது. இந்நிகழ்வுகளில் வினை நீராற்பகுப்பு வினை என்று அழைக்கப்படுகிறது. கனிம அமிலங்கள் சேர்க்கப்படுவதால் நிகழும் புரோட்டான் பகுப்பு வினைகள் சில சமயங்களில் உலோக மையங்களில் இருக்கும் கரிம ஈந்தணைவிகளை நீக்கம் செய்யப் பயன்படுகிறது [2].

நைட்ரைடுகள், பாசுபைடுகள், சிலிசைடுகள் மற்றும் பிற இனங்கள்தொகு

மிகைமின்சுமை கொண்ட எதிர்மின் அயனிகளைப் பெற்றுள்ள கனிம வேதியியல் பொருட்களும் புரோட்டான் பகுப்பு வினைக்கு ஆட்படுகின்றன. நைட்ரைடுகள் (N3−), பாசுபைடுகள் (P3−), சிலிசைடுகள் (Si4−) போன்ற வழிப்பொருட்கள் நிராற்பகுப்பு அடைந்து அமோனியா, பாசுபீன் மற்றும் சிலேன்களாக உருவாகின்றன. M-NR2, M-PR2,மற்றும் M-SiR3 பிணைப்புகள் கொண்ட மூலக்கூற்று சேர்மங்களில் வரிசையொப்பு வினைகள் நிகழ்கின்றன [3].

மேற்கோள்கள்தொகு

  1. Gordon W. Gribble, Ahmed F. Abdel-Magid, "Sodium Triacetoxyborohydride" Encyclopedia of Reagents for Organic Synthesis, 2007, John Wiley & Sons.எஆசு:10.1002/047084289X.rs112.pub2
  2. Chu Sun, Masami Okabe, David L. Coffen, Jeffrey Schwartz "Conjugate Addition Of A Vinylzirconium Reagent: 3-(1-octen-1-yl)cyclopentanone".Org. Synth. 1993, 71, 83. எஆசு:10.15227/orgsyn.071.0083.
  3. Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. ISBN 0-7506-3365-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோட்டான்பகுப்பு&oldid=2748336" இருந்து மீள்விக்கப்பட்டது