புரோமோபென்சால்டிகைடு

மாற்றியங்களின் குழு

புரோமோபென்சால்டிகைடு (Bromobenzaldehyde) என்பது BrC6H4COH என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் பார்மைல் குழு ஒன்றும் மைய பென்சீன் வளையத்துடன் இணைக்கப்பட்ட புரோமின் அணுவும் காணப்படுகின்றன. இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு மூன்று புரோமோபென்சால்டிகைடுகள் காணப்படுகின்றன. இவற்றை பென்சால்டிகைடின் புரோமினேற்ற வழிப்பெறுதிகள் என்றும் அல்லது புரோமோபென்சீனின் பார்மைலேற்ற வழிப்பெறுதிகள் என்றும் கருதலாம்.

2-புரோமோபென்சால்டிகைடு[1]
பெயர் 2-புரோமோபென்சால்டிகைடு
கட்டமைப்பு
மூலக்கூற்று வாய்ப்பாடு
மோலார் நிறை 185.020 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
சி.ஏ.எசு எண் [6630-33-7]
அடர்த்தி மற்றும் நிலை 1.585 கி/மில்லி, நீர்மம்
நீரில் கரைதிறன் கரையாது
உருகுநிலை 16–19 °செல்சியசு
கொதிநிலை 230 °செல்சியசு
3-புரோமோபென்சால்டிகைடு[2]
பெயர் 3-புரோமோபென்சால்டிகைடு
கட்டமைப்பு
மூலக்கூற்று வாய்ப்பாடு C7H5BrO (BrC6H4COH)
மோலார் நிறை 185.020 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
சி.ஏ.எசு எண் [3132-99-8]
அடர்த்தி மற்றும் நிலை 1.587 கி/மில்லி, நீர்மம்
நீரில் கரைதிறன் கரையாது
உருகுநிலை 18–21 °செல்சியசு
கொதிநிலை 233–236 °செல்சியசு
4-புரோமோபென்சால்டிகைடு[3][4]
பெயர் 4-புரோமோபென்சால்டிகைடு
கட்டமைப்பு
மூலக்கூற்று வாய்ப்பாடு
மோலார் நிறை 185.020 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
சி.ஏ.எசு எண் [1122-91-4]
அடர்த்தி மற்றும் நிலை திண்மம்
நீரில் கரைதிறன் கரையாது
உருகுநிலை 57 °செல்சியசு
கொதிநிலை 255–258 °செல்சியசு

மேற்கோள்கள்

தொகு
  1. "2-Bromobenzaldehyde". ChemSpider (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 January 2024.
  2. "3-Bromobenzaldehyde". Sigma-Aldrich.
  3. "4-Bromobenzaldehyde". ChemSpider. பார்க்கப்பட்ட நாள் 21 October 2023.
  4. "4-Bromobenzaldehyde". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமோபென்சால்டிகைடு&oldid=4015489" இலிருந்து மீள்விக்கப்பட்டது