புறக்கோள் (extrasolar planet, அல்லது exoplanet), என்பது சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கோளைக் குறிக்கும். முதலாவது புறக்கோள் 1917 இல் அவதானிக்கப்பட்டது, ஆனாலும் அது அங்கீகரிக்கப்படவில்லை.[1] 2022 சூலை 9 வரை பெறப்பட்ட தகவல்களின் படி, இதுவரை 5,110 புறக்கோள்கள் இருப்பது வானியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.[2][3] இவற்றில் பெரும்பாலான புறக்கோள்களின் புகைப்படங்கள் நேரடியாகப் பெறப்படாமல், ஆரத் திசைவேகம் (radial velocity) அவதானிப்புகள் மூலம் பெறப்பட்டவையாகும்[2].

பல புறக்கோள்கள் வியாழன் கோளை ஒத்த பெரும் கோள்கள் ஆகும். சில புறக்கோள்கள் எடை குறைந்தவையாகும். இவை பூமியை விட சில மடங்கு அதிக நிறை உடையவை[4][5] பல விண்மீன்கள் கோள்களைக் கொண்டுள்ளதென இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 விழுக்காடு விண்மீன்கள் சூரியனை ஒத்தவை ஆகும்[6].

மேற்கோள்கள்

தொகு
  1. Landau, Elizabeth (12 November 2017). "Overlooked Treasure: The First Evidence of Exoplanets". நாசா. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
  2. 2.0 2.1 "List of Exoplanets". exoplanet.eu. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.
  3. Brennan, Pat (21 March 2022). "Cosmic Milestone: NASA Confirms 5,000 Exoplanets". நாசா. https://exoplanets.nasa.gov/news/1702/cosmic-milestone-nasa-confirms-5000-exoplanets/. பார்த்த நாள்: 2 April 2022. 
  4. "Rock planets outnumber gas giants". Virgin Media. 28 மே 2008. http://latestnews.virginmedia.com/news/tech/2008/05/28/rock_planets_outnumber_gas_giants?showCommentThanks=true. 
  5. Characteristics of Kepler Planetary Candidates Based on the First Data Set: The Majority are Found to be Neptune-Size and Smaller, William J. Borucki, for the Kepler Team (Submitted on 14 Jun 2010)
  6. G. Marcy et al. (2005). "Observed Properties of Exoplanets: Masses, Orbits and Metallicities". Progress of Theoretical Physics Supplement 158: 24–42. doi:10.1143/PTPS.158.24. http://ptp.ipap.jp/link?PTPS%2F158%2F24. பார்த்த நாள்: 2010-07-02. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறக்கோள்&oldid=3529560" இலிருந்து மீள்விக்கப்பட்டது