புறநானூறு தொகுப்பமைதி

புறநானூறு தொகுப்பமைதி பற்றிய கருத்துக்கள் கருதத் தக்கவை. [1] புறநானூற்றில் கடவுள் வாழ்த்து உட்பட 400 பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்து தவிர 400 பாடல்கள் இருந்திருக்கவேண்டும் என அறிஞர்கள் கருதுவர். 267, 268 எண் கொண்ட பாடல்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. பாடல் 266-ன் பிற்பகுதி சிதைந்துவிட்டது. 156 புலவர்கள் இவற்றைப் பாடியுள்ளனர்.

குழு குறிப்பிடும் குறிப்புகள்

தொகு
  • முடிமன்னர் மூவர், குறுநில மன்னர் வேளிர் முதலானோர், போர், கையறுநிலை, நடுகல், மகளிர் தீப்பாய்தல் பற்றிய பாடல்கள் அடுக்காக உள்ளன.
  • சேரர்,பாண்டியர்,சோழர் என்ற வரிசையில் மூவேந்தர் பற்றிய பாடல்கள் முதல் 18-ல் உள்ளன. பின் மாறுகிறது.
  • புறநானூற்றுச் சுவடி ஒன்றின் தொடக்கத்தில் அறநிலை என்னும் குறிப்பு உள்ளது. இதனால் புறநானூறு அறநிலை, பொருள்நிலை, இன்பநிலை எனப் பகுக்கப்பட்டிருந்தது போலும் எனக் கருதப்படுகிறது.அரசர்க்கு அறிவுரை கூறும் பாடல்களும், ஆற்றுப்படைப் பாடல்களும் விரவி வருவது கருதத் தக்கது.
  • பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள திணை, துறை - குறிப்புகளில் சில பொருந்தவில்லை எனக் கருதி நச்சினார்க்கினியர் வேறு குறிப்புகள் தருகிறார். [2]
  • இந்த நூலின் முதல் 266 பாடல்களுக்குப் பழைய உரை ஒன்று உண்டு.
  • இந்தப் பழைய உரை தரும் சில சிறப்புக் குறிப்புகளால் இந்தப் பழைய உரைக்கு முன்னரும் ஓர் உரை இருந்தது என்பதைக் காட்டுகின்றன.

பகுப்பமைதி

தொகு

அடியில் காணும் பகுப்பமைதியைப் புறநானூற்றுத் தொகுப்பில் காணமுடிகிறது.

மூவேந்தர் பற்றி

தொகு

2 சேரமான் பெருச்சோற்று உதியஞ் சேரலாதன்
3 பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
4 சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி
5 சேரமான் கருவூர் எறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை
6 பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
7 சோழன் கரிகால் பெருவளத்தான்
8 சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்
9 பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
10 சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
11 சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ
12 பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
13 சேரமான் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி, சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை
14 சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்
15 பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
16 சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி
17 பாண்டியன் தலையாலங்கானத்துசு செரு வென்ற நெடுஞ்செழியன், யானைக்கண் சேய் மாந்தஞ்சேரல் இரும்பொறை
18, 19, பாண்டியன் நெடுஞ்செழியன்
20 சேரமான் யானைக்கண் சேய் மாந்தஞ்சேரல் இரும்பொறை
21 கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
22 சேரமான் யானைக்கண் சேய் மாந்தஞ்சேரல் இரும்பொறை
23 24 25 26 பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்
27 28 29 30 31 32 33 சோழன் நலங்கிள்ளி
34 35 36 37 38 39 40 41 42 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
43 44 சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்
45 சோழன் நலங்கிள்ளி
46 சோழன் குளமுற்றத்துஉத் துஞ்சிய கிள்ளிவளவன்
47 சோழன் நலங்கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி
48 49 சேரமான் கோக்கோதை மார்பன்
50 சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்மொறை
51 52 பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
53 சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
54 சேரமான் குட்டுவன் கோதை
55 56 57 பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
58 சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
59 பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
60 சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
61 சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி
62 63 சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேல்பல் தடக்கைப் பெருவிறல் கிள்ளி
64 பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
65 சேரமான் பெருஞ்சேரலாதன், சோழன் கரிகால் பெருவளத்தான்
66 சோழன் கரிகால் பெருவளத்தான்
67 கோப்பெருஞ்சோழன்
68 சோழன் நலங்கிள்ளி
69 70 சோழன் கிளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்ஃ

வேந்தர் பாட்டு

தொகு

71 ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
72 பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
73 75 சோழன் நலங்கிள்ளி
74 சேரமான் கணைக்கால் இரும்பொறை

வேந்தர் பற்றி

தொகு
76 77 78 79, 80 81 82 83 84 85 பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
86 காவற்பெண்டு பாட்டு

வேளிர், குறுநில மன்னர் - பற்றி

தொகு
87-104 அதியமான் நெடுமான் அஞ்சி
105-120 வேள் பாரி
121-126 மலையமான் திருமுடிக்காரி
127-136 ஆய்
137-140 நாஞ்சில் வள்ளுவன்
141-147 வையாவிக் கோப் பெரும் பேகன்
148-151 கண்டீரக் கோப் பெரு நள்ளி
152-153 வல்வில் ஓரி
154-156 கொண்கானங் கிழான்
157 ஏறைக்கோன்
158-165 குமணன்
166 சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணத்தாயன்
167 ஏனாதி திருக்கிள்ளி
168-172 பிட்டங் கொற்றன்
173 சிறுகுடி கிழான் பண்ணன்
174 மலையமான் சோழிய ஏனாதி
175 ஆதனுங்கன்
176 ஓய்மான் நல்லியக்கோடன்
177 மல்லி கிழான் காரி ஆதி
178 பாண்டியன் கீரஞ் சாத்தன்
179 நாலை கிழவன் நாகன்
180 ஈந்தூர் கிழான் தோயன் மாறன்
181 வல்லார் கிழான் பண்ணன்

நெறிமுறைப் பாட்டு

தொகு
182 கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாட்டு
183 பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாட்டு
184 பிசிராந்தையார் பாட்டு (அறிவுடை நம்பியிடம்)
185 தொண்டைமான் இளந்திரையன் பாட்டு
186 மோசி கீரனார்
187 ஔவையார்
188 பாண்டியன் அறிவுடை நம்பி
189 மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
190 சோழன் நல்லுருத்திரன் பாட்டு
191 கோப்பெருஞ்சோழன்
192 கணியன் பூங்குன்றன்
193 ஓரேர் உழவர்
194 பக்குடுக்கை நன்கணியார்
195 நரிவெரூஉத் தலையார்

பரிசில் நீட்டித்தல்

தொகு
196 பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
197 சோழன் குராபள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன்

பொது

தொகு
198 199 பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
200 201 202 பாரிமகளிர்
203 சேரமான் பாமுள்ளூர் எறிந்த இளஞ்சேட்சென்னி
204 வல்வில் ஓரி

பரிசில் நீட்டித்தல்

தொகு
205 கடியநெடு வேட்டுவன்
206 அதியமான் நெடுமான் அஞ்சி
207 இளவெளிமான்
208 அதியமான் நெடுமான் அஞ்சி
209 மூவன்
210 211 சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை

கையறுநிலை

தொகு
212-223 கோப்பெருஞ்சோழன்
224 சோழன் கரிகால் பெருவளத்தான்
225 சோழன் நலங்கிள்ளி
226 227 228 சோழன் குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவன்
229 சேரமான் யானைகடண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
230 அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி
231 232 அதியமான் நெடுமான் அஞ்சி
233 234 வேள் எவ்வி
235 அதியமான் நெடுமான் அஞ்சி
236 வேள் பாரி
237 238 வெளிமான்
239 நம்பி நெடுஞ்செழியன்
240 241 ஆய்
241 242 ஒல்லையூர் கிழான் பெருஞ்சாத்தன்
243 இளமை
244 -
245 பெருங்கோப்பெண்டு, சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை மனைவி
246 247 பெருங்கோப்பெண்டு, பூதப்பாண்டியன் தேவி

கலவை

தொகு
248-250 மைம்மை
251-252 தாபத வாகை என்னும் துறவு வாழ்க்கை பற்றிக் கூறும் பாடல்கள்
253-256 முதுபாலை
257 முதல் -
ஆனந்தப்பையுள்,
இயன்மொழி,
உண்டாட்டு,
உவகைக் கலுழ்ச்சி,
எருமை மறம்,
ஏர்க்கள-உருவகம்,
ஏறாண்-முல்லை,
களிற்றுடனிலை,
குடிநிலை-உரைத்தல்,
குதிரை மறம்,
கையறுநிலை,
செருவிடை வீழ்தல்,
தானைநிலை,
தானை-மறம்,
நீள்-மொழி,
நூழிலாட்டு,
நெடுமொழி,
பரிசில் கடாநிலை,
பாண்பாட்டு,
பார்ப்பன-வாகை,
பிள்ளைப் பெயர்ச்சி,
பூக்கோள்-காஞ்சி,
பூவைநிலை,
பெருங்காஞ்சி,
பெருஞ்சோற்றுநிலை,
பேய்க்காஞ்சி,
மகள்-பால்-காஞ்சி,
மறக்கள-வஞ்சி,
மறக்கள-வேள்வி,
மூதில்-முல்லை,
வல்லாண்-முல்லை,
வாழ்த்தியல்,
வேத்தியல்,

என்றெல்லாம் பெயரிடப்பட்டுள்ள பல்துறைப் பாடல்கள் அங்கும் இங்குமாகக் கலந்து வருகின்றன.

மன்னர் முதலானோர்

தொகு
359 அந்துவன் கீரன்
360 தந்துமாறன்
366 தருமபுத்திரன்
367 சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராச-சூயம் வேட்ட பெருநற்கிள்ளி
368 சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேல்பல்-தடக்கை பெருநற்கிள்ளி
369 சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்
370 சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி
371 272 தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
373 சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
374 275 ஆய் அண்டிரன்
376 ஓய்மான் நல்லியாதன்
377 சோழன் இராச-சூயம் வேட்ட பெருநற்கிள்ளி
378 சோழன் செருப்பாழி எரிந்த இளஞ்சேட்சென்னி
379 ஓய்மான் வில்லியாதன்
380 நாஞ்சில் வள்ளுவன்
381 கரும்பனூர் கிழான்
382 சோழன் நலங்கிள்ளி
384 கரும்பனூர் கிழான்
385 அம்பர் கிழான்
386 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
387 சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன்
388 சிறுகுடி கிழான் பண்ணன்
389 ஆதனுங்கன்
390 அதியமான் நெடுமான் அஞ்சி
391 பொறையாற்று கிழான்
392 அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி
393 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
394 சோழிய ஏனாதி திருக்குட்டுவன்
395 சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
396 வாட்டாற்று எழினி-ஆதன்
397 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
398 சேரமான் வஞ்சன்
399 தாமான் தோன்றிக்கோன்
400 சோழன் நலங்கிள்ளி

கருவிநூல்

தொகு
  • பதிப்பாசிரியர் குழு, புறநானூறு வெளியீடு - எஸ் ராஜன், 5 தம்புச்செட்டித்தெரு, சென்னை 1 – முதல் பதிப்பு 1955

அடிக்குறிப்பு

தொகு
  1. பதிப்பாசிரியர் குழு புறநானூறு வெளியீடு எஸ் ராஜன், 5 தம்புச்செட்டித்தெரு, சென்னை 1 – முதல் பதிப்பு 1955 முன்னுரை
  2. தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் நூற்பா 5, 8, 21, 35 உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறநானூறு_தொகுப்பமைதி&oldid=3294205" இலிருந்து மீள்விக்கப்பட்டது