புறா மரம்
பொதுவாக புறா மரம் (dove-tree)[1] (தாவரப் பெயர்; Davidia involucrata) கைக்குட்டை மரம், பாக்கெட் கைக்குட்டை மரம் அல்லது பேய் மரம் எனவும் அறியப்படும் இது நைசேசி குடும்பத்தைச் சேர்ந்த[2] ஒரு நடுத்தர அளவிலான இலையுதிர் மரம் ஆகும். இது டேவிடியா பேரினத்தில் வாழும் ஒரே உயிரினம். இது முன்பு கார்னேசியே என்ற நாய் மரக் குடும்பத்தில் டுபெலோசுடன் சேர்க்கப்பட்டிருந்தது.[3] இதன் புதைபடிவ இனங்கள் மேல் கிரெட்டேசியஸ் வரை பரவியுள்ளன.
புறா மரம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | டாவிடியா |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/டாவிடியாட. இன்வாலுகிரட்டா
|
இருசொற் பெயரீடு | |
ட இன்வாலுகிரட்டா என்றி எர்னெஸ்ட் பெயில் | |
வேறு பெயர்கள் | |
டாவிடியா லேயெட்டா |
மரத்தின் அமைவு
தொகுஇது மேற்கு சீனாவில் வளர்கிறது. இம்மரத்தைப் பற்றி சீனாவின் இயற்கையாளரும் பிரஞ்சு மிசினினரியுமான அர்மண்ட் டேவிட் என்பவர் முதன் முதலில் விளக்கினார். இதனால் இதற்கு இவர் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.
இது 50 முதல் 70 அடி உயரம் வளரக் கூடியது. கூம்பு வடிவில் இருக்கும். இதனுடைய இலைகள் இதய வடிவில் உள்ளது. இம்மரத்தில் உள்ள பூக்கள் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. உருண்டையான மலர்க் கொத்தில் ஆண் பூக்கள் பலவும், ஒன்றிலிருந்து பல இருபால் பூக்களும் உள்ளன. இதன் அடியில் இரண்டு பூவடிச் செதில் இலைகள் சந்தன வெள்ளை நிறத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். இது 15 செ.மீ. நீளத்திற்கு ஒன்று பெரியதும் மற்றும் சிறியதுமாக இருக்கும். இது பார்ப்பதற்கு பச்சை இலைகளின் இடையே புறா உட்கார்ந்து இருப்பது போல தெரியும் இதனால் இதற்கு புறா மரம் என்று பெயர் வந்தது. இதனுடையே கனி, பூ முடிந்தவுடன் வரும். இலைகள் கொட்டிவிடும். விதை கல்போன்று இருக்கும்.
ஒளிப்படங்கள்
தொகு-
பூக்களுடன் கூடிய இளைய மரம்
-
செடி
-
தண்டு
-
இலைகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
- ↑
- USDA, ARS, GRIN. புறா மரம் in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம்.
- ↑ "Angiosperm Phylogeny Website - Cornales". Missouri Botanical Garden. பார்க்கப்பட்ட நாள் 28 August 2023.