புற்றுநோய் அறுவை மருத்துவர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புற்றுநோய் அறுவை மருத்துவர் (Surgical oncologist), புற்றுநோய் கண்ட இடங்களை அறுவை மூலம் அகற்றி மருத்துவம் மேற்கொள்ளும் சிறப்புப் பட்டம் பெற்ற மருத்துவராவார். பண்டைய நாட்களில் அறுவை மருத்துவமே நடைமுறையிலிருந்தது. தொட்டுணரும் வகையிலிருக்கும் புற்றுத் திசுவினையும் இதனைச் சுற்றியுள்ள சிறுபகுதியினையும் அறுவையின் போது அகற்றுகிறார். இப்படி செய்வதால் புற்று மறுபடியும் வளருவது தவிர்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கையாக அறுவை மருத்துவத்துடன் பொதுவாகக் கதிர்மருத்துவமும் அல்லது வேதிமருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. கவனத்துடன் மேற்கொள்ளப்படும் அறுவை மருத்துவம் நல்ல பலனைக் கொடுக்கிறது.