புற்று வழிபாடு
புற்று வழிபாடு என்பது இந்து சமயத்தின் வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். பொதுவாக பெண்களால் இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. நெடுங்காலம் முன்பு பாம்புகள் வாழ்ந்த புற்றினை பெண்கள் வழிபடுகின்றார்கள். அப்புற்றுக்கு அருகேயுள்ள இடங்களை தூய்மை செய்து புற்று முழுவதும் மஞ்சள் மற்றும் கும்குமத்தினை இடுகின்றார்கள்.
பாம்பிற்கு பால் மற்றும் முட்டையினை அப்புற்றுக்கு அருகே வைக்கின்றார்கள். அப்புற்றுக்கு அருகே விளக்கேற்றி சூடம் கொளுத்தி வழிபாடு செய்கின்றார்கள். புற்றினை வலம் வருதலும், அவ்வாறு வலம் வருகையில் மஞ்சள் நூலினைச் சுற்றுவதும் கூட உண்டு. இந்த புற்று வழிபாட்டினை வெகு சிலரே தினமும் மேற்கொள்கின்றனர். பலர் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளின் காலையில் வழிபாடு செய்கின்றார்கள்.
ஆடி மாதத்தின் வளர்பிறைப் பஞ்சமி நாக பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. அது போல ஐப்பசி மாத வளர்பிறை சதுர்த்தி நாக சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இவ்விரு நாட்களிலும் புற்று வழிபாடு சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. இத்துடன் சூரிய மற்றும் சந்திர கிரகண நாட்களிலும் புற்று வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. [1]
ஆதாரங்கள்
தொகு- ↑ "புற்றில் பிறந்த பொன்னே. புவனம் காக்கும் அன்னையே - நக்கீரன் வலைதளம்". Archived from the original on 2011-09-26. பார்க்கப்பட்ட நாள் 2016-06-14.