புலவர் திருமார்பன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புலவர் திருமார்பன் அவர்கள் வெளி உலகுக்கு அவ்வளவாக தெரியாத விளம்பரம் விரும்பாத தமிழறிஞர்.'திருமார்பனின் மாதவிக்காப்பியம்' எனும் மரபுக்கவிதை நூலை இயற்றியவர்.
பிறப்பு
தொகுதிருமார்பன் தமிழ் நாட்டில் திருச்செங்கோடு வட்டத்தில் இலுப்புலி எனும் கிராமத்தில் 1933ம் ஆண்டு மதலைமுத்து என்கிற மாரிமுத்து என்பவருக்கும் பழனியம்மாள் என்பவருக்கும் பத்தாவது மகவாக பிறந்தார். அவரின் இயற்பெயர் பாக்கியசாமி என்பதாகும்.
படிப்பு
தொகுபிறப்பால் கிருத்துவரான பாக்கியசாமி தன்னுடைய ஆரம்ப கல்வியை கிருத்துவ பள்ளியில் பயின்றார். எட்டாம் வகுப்பு வரை படித்த போது படிப்பை நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டது.அவரின் தந்தையின் பொருளாதாரம் குறைந்த போது அவர் சொன்ன வார்த்தைகள் " நீ ஆண் பிள்ளை எப்படியாவது பிழைத்துக்கொள்ளுவாய், உன் அக்கா படிக்கட்டும் நீ படிப்பை நிறுத்திவிடு' அப்போது படிக்கும் வாய்ப்பை இழந்த பாக்கியசாமி தனித்தேர்வராக பள்ளி இறுதி தேர்வை எழுதித் தேறினார்.