புலவர் புராணம் (தண்டபாணி சுவாமிகள்)

புலவர் புராணம் என்பது தமிழ்ப் புலவர்களின் வரலற்றைக் கூறும் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நூலாகும். இதை வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றியுள்ளார். இதில் 72 புலவர்களின் வரலாறு பாடப்படுள்ளது.[1]

பார்வை

தொகு

தண்டபாணி சுவாமிகள் திருநெல்வேலியில் இருந்த போது பாடத் துவங்கி, நீண்ட காலம் கழித்து திருமாவத்தூரில் பாடி முடிக்கப்பட்டது. இது 72 இயல்களில், 3,005 பாடல்கள் கொண்டதாக உள்ளது. இந்நூல் முந்துநூல் மரபுகளையும், வாய்மொழி மரபுகளையும் அடிப்படையாகக் கொண்டு இயற்றபட்டுள்ளது. தண்டபாணி சுவாமிகள் தான் சென்ற இடங்களில் செவிவழியாகக் கேள்விப்பட்ட செய்திகளில் நம்பகத்தன்மை உள்ளவற்றையும் பயன்படுத்தி இந்த நூலை எழுதியுள்ளார். தனக்கு முன்னாள் இருந்த புலவர்களின் வரலாறு மட்டுமல்லாமல் தன் சமகாலத்தில் வாழ்ந்த புலவர்களின் வரலாற்றையும் இதில் பாடியுள்ளார். இந்த நூலானது புலவர் வரலாறு, அவரை ஆதரித்த பரவலர், அவருடன் தொடர்புடைய புலவர், அக்கால சமூகச் சூழல், புலவரின் படைப்புகள், படைப்பு உருவான சூழல் என ஓரளவு முழுமையான அமைப்போடு இது இயற்றபட்டுள்ளது.

வரலாறு

தொகு

புலவர் புராணம் நூல் தண்டபாணி சுவாமிகள் இறந்த பிறகு வி. கிருஷ்ணமாச்சாரியாரால் பதிப்பிக்கப்பட்டு 1901 முதல் 1906 வரை மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது.[2] ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய வரலாறைக் கற்பிக்கும் நோக்கில் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1908, 1931 ஆகிய ஆண்டுகளில் இதன் இரண்டாம், மூன்றாம் பதிப்புகளை தண்டபாணி சுவாமிகளின் மகனான செந்தினாயகம் வெளியிட்டார். 1944 இல் அருஞ்சொற்பொருள் விளக்கத்துடன் நான்காம் பதிப்பை ஆர். கிருஷ்ணன் வெளியிட்டார். இதன் பிறகு 2024 ஆம் ஆண்டு க. வேங்கடராமனின் உரையுடன் புலவர் புராணம் தாமரை பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. தினமலர். "'புலவர் புராணம் நூல் வெளியீடு ஒரு சரித்திர நிகழ்வு'". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. 72 தமிழ்க் கவிஞர்களின் சரிதம் தந்த முருகதாஸ் சுவாமிகள்
  3. "நூல் வெளி: தமிழ் இலக்கிய வரலாற்றின் முன்னோடி நூல்". 2024-07-20. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)