புலிந்தர்கள்
புலிந்தர்கள் (Pulindas) (சமஸ்கிருதம்: पुलिंद) பண்டைய பரத கண்டத்தின் மத்திய இந்தியாவின் விந்திய மலைத்தொடர்களில் வாழ்ந்த மலைவாழ் இன மக்கள் ஆவார்.[1] அசோகரின் தூண்களில் (கி மு 269 - 231) புலிந்தர்களையும், அவர்களது தலைநகரமான புலிந்த நகரத்தையும், அதனருகில் வாழ்ந்த வேற்று இன மக்களையும் குறித்துள்ளது. புலிந்த நகரம், தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[2] புலிந்தர்களை, விந்திய மலைத்தொடர்கள் மற்றும் சாத்பூரா மலைத்தொடர்களில் வாழும் மலைவாழ் பழங்குடியினரான பில் மக்களாக இருக்கலாம் என கருதுகிறார்கள்.[3]

புலிந்தர்கள், இமயமலை மற்றும் அசாம் மலைப்பகுதிகளில் வாழ்ந்த கிராதர்களுடன் தொடர்புடைய மலைவாழ் பழங்குடி மக்கள் என்றும் சிலர் கருதுகின்றனர்.[4]
மகாபாரதக் குறிப்புகள்
தொகுகுருச்சேத்திரப் போரில், புலிந்தர்கள் ஈட்டி, வில், அம்புகளுடன், கௌரவர் அணி சார்பாக போரிட்டனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hemchandra Raychaudhuri (1953), Political history of ancient India: from the accession of Parikshit to the extinction of the Gupta dynasty, University of Calcutta, பார்க்கப்பட்ட நாள் 2010-05-06,
... Pulindas who are invariably associated with the Nerbudda (Reva) and the Vindhyan region ...
- ↑ Devadatta Ramkrishna Bhandarkar (2000), Aśoka, Asian Educational Services, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1333-3, பார்க்கப்பட்ட நாள் 2010-05-06,
... in Rock Edict XIII ... we have to place them somewhere to the north or the north-east of the Andhras ... In the Vayu-Purana, the southern branch of the Pulindas has been placed side by side with the Vindhya-muliyas ... their capital is mentioned as Pulinda-nagara and their kingdom as contiguous with the Chedi country ... the Jubbulpur District ...
- ↑ Radhagovinda Basak, AŚOKAN INSCRIPTIONS, Calcutta, 1959, pp. 75
- ↑ D.C. Sircar (1990), Studies in the geography of ancient and medieval India, Motilal Banarsidass Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0690-5, பார்க்கப்பட்ட நாள் 2010-05-06,
... The Pulindas were a hill tribe usually connected with the Vindhyan range. Partiger notices several branches of the Pulinda tribe, viz. (1) a western branch, (2) a Himalayan branch related to the Kiratas and Tanganas, and (3) a southern branch ...