புல்லங்காடனார்
புல்லங்காடனார் என்பவர் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான கைந்நிலையை இயற்றியவராவார்.[1] இவர் மாறோகம் என்னும் பகுதியில் இருக்கும் முள்ளி நாடு எனும் ஊரில் உள்ள நல்லூரைச் சேர்ந்தவர். இவர் தந்தையார் வணிகருள் சிறந்தவர்க்கு மன்னரால் வழங்கப்படும் காவிதி என்னும் விருதினைப் பெற்றவராவார். மாறோக்கம் கொற்கையைச் சேர்ந்த பகுதியாகும். நூலின் 60 ஆவது பாடலில் கொற்கையையும் அதன் மன்னன் பாண்டியனையும் தென்னவன் கொற்கை என்று குறிப்பிட்டுள்ளார். இவருடைய காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டு ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,முனைவர் பாக்யமேரி,NCBH வெளியீடு,சென்னை-98