புல் மரம்
புல் மரம்[1] அல்லது பால்கா என அழைக்கப்படும் சாந்ரோகாயியே பிரிசீ (Xanthorrhoea preissii) தென்மேற்கு ஆத்திரேலியாவில் காணப்படும் ஒருவித்திலைச் சிற்றினம் ஆகும்.
வகைப்பாடு
தொகுதாவரவியல் பெயர்: சாந்ரோகா பிரிசீ (Xanthorrhoea preissii)
குடும்பம் : லில்லியேசியீ Liiaceae
மரத்தின் அமைவு
தொகுசாந்ரோகாயியே பிரிசீ பல பருவச் செடிகளில் நீண்ட காலம் உயிர் வாழக் கூடியது. இதனுடைய அடி மரம் ஒரு அடி அகலத்திற்கு தடிமனாக இருக்கும்.
இலை-மலர் அமைப்பு
தொகுசாந்ரோகாயியே பிரிசீயின் மெல்லிய இலைகள் 1 மீ – 1.5 மீ நீளத்திற்கு ரோஜா பூ இதழ் அடுக்குபோல் அமைந்து காணப்படும். இலைகளின் நடுப்பகுதியிலிருந்து மேல் நோக்கி மலர்க் கொத்து வரும் இதில் சிறிய வெள்ளை நிறப் பூக்கள் மலரும். மலர் கொத்தில் உள்ள மொட்டுகளில் முதலில் வடக்குப் பகுதியில் (சூரியன்) உள்ள மொட்டுக்கள்தான் மலரும்.புல் மரத்தின் தண்டுப் பகுதியில் காய்ந்த பழைய இலைகள் மூடி உள்ளது. இதன் தண்டிலிருந்து கருப்பு அல்லது மஞ்சள் நிறப் பிசின் வெளிவருகிறது.இச்சாதியில் 14 இனங்கள் உள்ளன. இவை வறண்ட பாறை பகுதிகளில் நன்கு வளர்கின்றன. இவை அனைத்தும் அதிக வருடங்கள் உயிர் வாழ்கின்றன.
பரவல்
தொகுஇப்புல் மரம் ஆஸ்திரேலியாவில் வளர்கிறது. இம்மரம் மிகமிக அற்புதமானது. இது 2.5 செ.மீ. வளர்வதற்கு 100 ஆண்டுகள் ஆகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pastoral-Agricultural; Agricultural Notes". Friday 17 August 1906. Morning Bulletin (Rockhampton, QLD). 1906-08-17. https://trove.nla.gov.au/newspaper/article/53074858?searchTerm=Xanthorrhoea%20preissii%20%20%20%20%20%20%20%20%20%20%20%20&searchLimits=l-availability=y.
- ↑ Ward, D J; Lamont, B B. "Probability of grasstrees (Xanthorrhoea preissii) flowering after fire". Journal of the Royal Society of Western Australia (83): 13–16. http://www.rswa.org.au/content/work/journals/PDF/83(1)/83(1)ward.pdf.