புளிப்பு வளிமம்

புளிப்பு வளிமம் (Sour Gas) என்பது கணிசமான அளவிற்கு ஹைட்ரசன் சல்பைடு கலந்திருக்கும் இயற்கை எரிவளியையோ அல்லது எந்தவொரு வளிமத்தையுமோ குறிக்கும். இதனைக் கந்தக இயல்வளிமம் என்றும் கூறுவதுண்டு. ஹைட்ரசன் சல்பைடு-இன் அளவு 5.7 மில்லிகிராம்/கனமீட்டர் என்னும் அளவிற்கும் மேல் கலந்திருக்கும் இயற்கை எரிவளி பொதுவாகப் புளிப்பு வளிமம் என்று வழங்கப்பெறும். தரவெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் இந்த அளவு மில்லியனுக்கு 4 பகுதிகள் கன அளவுக்குச் சமமானதாகக் கருதப்படுகிறது[1][2] இந்த அளவுக்கும் குறைவாக இருப்பின், நேர்மாறாக இனிப்பு வளிமம் என்று வழங்கப்பெறும்.

பொதுவாக அமில வளிமம் என்பதும் புளிப்பு வளிமம் என்பதும் ஒன்றற்கொன்று மாற்றி வழங்கப்பட்டாலும், அவை இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. புளிப்பு வளிமம் என்பது அவ்வளிமத்தில் உள்ள ஹைட்ரசன் சல்பைடு-இன் அளவைக் கொண்டு மட்டுமே நிர்ணயிக்கப் படுகிறாது. அமில வளிமம் என்பது கார்பன் டை ஆக்சைடு, அல்லது, ஹைட்ரசன் சல்பைடு போன்ற அமில வளிமங்களின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப் படுகிறது. காட்டாக, ஹைட்ரசன் சல்பைடு இன்றி வெறும் கார்பன் டை ஆக்சைடு மட்டுமே கொண்டுள்ள ஒரு வளிமத்தைப் புளிப்பு வளிமம் என்று சொல்லாது அமில வளிமம் என்று சொல்ல வேண்டும்.

புளிப்பு வளிமம் நச்சுத்தன்மை கொண்டது. மேலும் நச்சுப் பொருளான கந்தகம் பெரும்பாலும் ஹைட்ரசன் சல்பைடு வடிவத்தில் இருக்கும். புளிப்பு வளிமத்தின் ஹட்ரசன் சல்பைடு நீரோடு கலக்கும் போது சல்பியூரிக் அமிலம் தோன்றக் காரணமாகிக் குழாய்களையும் பிற ஏனங்களையும் உடைக்கும் தன்மையும் கொண்டது. அதனால், இயற்கை எரிவளியைப் பயன்படுத்தும் முன்பு, அதனில் கலந்திருக்கும் ஹைட்ரசன் சல்பைடு போன்றவற்றைக் குறைக்கும் வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளிப்பு_வளிமம்&oldid=2744950" இலிருந்து மீள்விக்கப்பட்டது