புளோசீரைட்டு

புளோசீரைட்டு (Fluocerite) என்பது (Ce,La)F3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். சீரியம், இலாந்தனம்புளோரைடு வகைக் கனிமமாக இக்கனிமம் கருதப்படுகிறது. புளோசீரைட்டு (La), புளோசீரைட்டு (Ce) என்ற நேர்மின் அயனிகளைச் சார்ந்துள்ள இரண்டு வெவ்வேறு கனிமங்களாக இக்கனிமம் அங்கீகரிக்கப்படுகிறது. இவை முறையே இலாந்தனம் டிரைபுளோரைடு, சீரியம் டிரைபுளோரைடு ஆகிய சேர்மங்களுடன் தொடர்பு கொண்டவையாகும். இரண்டும் முக்கோண வடிவமைப்பில் படிகங்களாகின்றன.

புளோசீரைட்டு (Ce) 1845 ஆம் ஆண்டில் சீரியம் இல்லாமல் சுவீடன் நாட்டின் நீர்வெப்ப இழைகளில் கண்டறியப்பட்டது. 1969 ஆம் ஆண்டு புளோசீரைட்டு (La) மத்திய கசகிசுத்தான் நாட்டில் கண்டறியப்பட்டு விவரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோசீரைட்டு&oldid=2687934" இலிருந்து மீள்விக்கப்பட்டது