புளோரன்சு குழ்சுமன்

'புளோரன்சு குழ்சுமன் (Florence Cushman) (1860-1940) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் என்றி டிரேப்பர் அட்டவணைத்தொகுப்பில் பணிபுரிந்தார். இவர் 1860 இல் மசாசூசட்டில் உள்ல போசுட்டனில் பிறந்தார். இவர் தன் பள்லிப்படிப்பைச் சார்லசுடவுன் உயர்நிலைப்பள்ளியில் 1877 இல் கற்று முடித்தார். இவர் 1888 இல் ஆர்வார்டு கல்லூரி வான்காணகத்தில் எட்வார்டு பிக்கரிங் இடம் பணியாளராகச் சேர்ந்து பணிபுரியலானார். இவர் 1918 இல் இருந்து 1934 வரை என்றி டிரேப்பர் அட்டவணைத்தொகுப்பில் ஆன்னி ஜம்ப் கெனானுடன் தொடர்ந்து பணிபுரிந்தார். இவர் அங்கு வானியலாளராக 1937 வரை பணியில் இருந்தார். இஅர் 1940 இல் தன் எண்பதாம் கவையில் இறந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Ogilvie, Marilyn Bailey (1986). "Cushman, Florence". Women in science : antiquity through the nineteenth century : a biographical dictionary with annotated bibliography (Reprinted). Cambridge, Mass.: MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780262650380. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரன்சு_குழ்சுமன்&oldid=2460559" இலிருந்து மீள்விக்கப்பட்டது