புளோரன்ஸ் ஆர். சபின்

புளோரன்ஸ் ரேனா சபின் (Florence Rena Sabin நவம்பர் 9, 1871 – அக்டோபர் 3, 1953) ஒரு அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஆவார். இவர் அறிவியல் துறையில் பெண்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்தார்; ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரியில் முழுநேரப் பேராசிரியராகப் பணியாற்றிய முதல் பெண்மணியும், தேசிய அறிவியல் அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார். மருத்துவ ஆய்வுகளுக்கான ராக்பெல்லர் மருத்துவ நிறுவனத்தின் துறைத் தலைவராகவும் விளங்கினார்.[1] தனது ஓய்வு காலத்திற்குப் பின்பும், கொலராடோவில் ஒரு பொது சுகாதார ஆர்வலராக தொழிலைத் தொடர்ந்தார், மேலும் 1951 இல் இப்பணிகளுகாக லாஸ்கர் விருது பெற்றார்.

புளோரன்ஸ் ஆர். சபின்
புளோரன்ஸ் ஆர். சபின்
பிறப்புநவம்பர் 9, 1871
செண்ட்ரல் சிட்டி, கொலராடோ
இறப்புஅக்டோபர் 3, 1953(1953-10-03) (அகவை 81)
டென்வர்
தேசியம்அமெரிக்கன்
துறைமருத்துவம்
பணியிடங்கள்ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி
ஸ்மித் கல்லூரி
அறியப்படுவதுஅறிவியலில் பெண்களின் முன்னோடி
சபின் உடல்நல விதிகள்

ஆரம்ப வாழ்க்கை

தொகு

கொலராடோவில் செண்ட்ரல் சிட்டி எனுமிடத்தில் செரெனா சபின் என்பவருக்கு நவம்பர் 9, 1871 இல் இளைய மகளாக புளோரன்ஸ் ரானா சாபின் பிறந்தார். புளோரன்சின் தாயார் ஓர் பள்ளி ஆசிரியராக இருந்தார். பின்னர் 1878 ஆம் ஆண்டில் பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுக் காய்ச்சல் (செப்சிஸ்) காரணமாக அவர் இறந்து போனார். அவரது தந்தை ஜார்ஜ் கே. சபின் ஒரு சுரங்க பொறியாளர் ஆவார். அச்சுரங்கத்தில் குடும்பத்தாரோடு வசித்துக் கொண்டு அங்கு வேலையும் செய்து வந்தார்.[2] அவரது தாயின் மரணத்திற்குப் பின் புளோரன்சும் அவரது சகோதரி மேரியும் சிகாகோவில் தனது மாமா ஆல்பர்ட் என்பவரின் வீட்டில் வசித்து வந்தனர். அதன் பின்னர் தங்கள் தந்தை வழி தாத்தா பாட்டிகள் வசித்து வந்த வெர்மாண்ட் என்ற இடத்திற்கு இடம் பெயர்ந்தனர்.

அவரது குழந்தை பருவத்தில் சபின் ஒரு பியானோ கலைஞராக வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார், இருப்பினும் இவர் இசைத் திறமையுடையவராக எப்பொழுதும் இருந்ததில்லை, உயர்நிலை பள்ளியில் படித்த பொழுது, அறிவியலில் கொண்ட கவனமானது, அவரது எதிர்காலத்தை மாற்றுவதற்குக் காரணமாயிற்று.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Rothe, Anna; Demarest, Helen, தொகுப்பாசிரியர்கள் (April 1945). "Sabine, Florence R(ena)". Current Biography 6 (4): 43–45. 
  2. Smith College n.d.
  3. Smith College N.D.. "Florence Rena Sabin Papers: Biographical Note". Sophia Smith CollectionJournal of Medical Biography. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரன்ஸ்_ஆர்._சபின்&oldid=2701567" இலிருந்து மீள்விக்கப்பட்டது