புளோரின் பெர்குளோரேட்டு

புளோரின் பெர்குளோரேட்டு (Fluorine perchlorate) என்பது FClO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளோரின், குளோரின் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இவ்வாயு நிலைப்புத் தன்மையற்ற ஒரு வாயுவாகும். தன்னிச்சையாக வெடிக்கும் இயல்பும்[2] ஊடுருவும் நெடியும்[3] கொண்ட இவ்வாயுவின் வாய்ப்பாட்டை FOClO3 என்றும் எழுதுகிறார்கள்.

புளோரின் பெர்குளோரேட்டு
Full structural formula of fluorine perchlorate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பெர்குளோரைல் ஐப்போபுளோரைட்டு
வேறு பெயர்கள்
புளோரின் பெர்குளோரேட்டு
இனங்காட்டிகள்
10049-03-3 Y
யேமல் -3D படிமங்கள் Image
  • FOCl(O)(O)O
பண்புகள்
FClO
4
உருகுநிலை −167.3 °C (−269.1 °F; 105.8 K)
கொதிநிலை −16 °C (3 °F; 257 K)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
9 கி.கலோரி/மோல்[1]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் வெடிக்கும் இயல்புடைய வாயு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

பெர்குளோரிக் அமிலத்துடன்[4] புளோரின் சேர்த்து வினைப்படுத்தி புளோரின் பெர்குளோரேட்டு தயாரிக்கப்படுகிறது.

 

நான்குபுளோரோ அம்மோனியம்பெர்குளோரேட்டை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி புளோரின் பெர்குளோரேட்டு தயாரிப்பது மற்றோரு தயாரிப்பு முறையாகும். இம்முறையில் தூய்மையான புளோரின் பெர்குளோரேட்டு கிடைக்கிறது. இதை வெடிக்கவிடாமல் மாற்றியமைக்க உறையச் செய்து பயன்படுத்துகிறார்கள்.[5]

 

அமைப்பு

தொகு

புளோரின் பெர்குளோரேட்டு, பெர்குளோரிக் அமிலத்துடன் ஒத்த அமைப்புச் செயலியாக இல்லை. ஏனெனில், புளோரின் அணு நேர்மின் சுமையுடன் இருப்பதில்லை. இதில் ஆக்சிசன் அணுவானது இதனுடைய எலக்ட்ரான் கவர்திறன் காரணமாக 0 என்ற அரிய ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது. ஆக்சிசனின் எலக்ட்ரான் கவர்திறன் குளோரினை விடவும் அதிகமானது ஆனால் புளோரினை விடவும் குறைவானது.

பாதுகாப்பு

தொகு

புளோரின் பெர்குளோரேட்டு ஒர் ஆபத்தான மற்றும் எதிர்பாராத தொடர்வினைகளில் பங்கேற்கும் ஒரு வேதிப்பொருளாகும். சக்ப்பிணைப்புச் சேர்மமான இதில் குளோரின் +7 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் மிகவும் கிளர்வுடைய O-F பிணைப்புடன் காணப்படுகிறது. கரிமச் சேர்மங்கள் போன்ற ஆக்சிசன் இறக்கிகள் மிகக்குறைவான அளவில் சேர்க்கப்பட்டாலும் இதை வெடிக்கச் செய்யமுடியும். இதன் விளைவாகத் தோன்றும் வேதிப்பொருட்களில் ஆக்சிசன் ஆலைடுகள், உப்பீனியிடைச் சேர்மங்கள் மற்றும் சில தீங்கு விளைவிக்கும் பொருட்களும் அடங்கும். முன்னோடிச் சேர்மங்கள் கவனக்குறைவாகக் கலக்கப்படும் விபத்தில் கூட இச்சேர்மம் உருவாகிவிடும். எனவே அதிக கவனத்துடன் இதைக் கையாள வேண்டும்.

வினைகள்

தொகு

FClO4 ஒரு வலிமையான ஆக்சிசனேற்றி ஆகும். இது அயோடைடு அயனியுடன் வினைபுரிகிறது:

FOClO3 + 2I → ClO4 + F + I2

FClO4, நான்குபுளோரோ எத்திலீன் உடனும் வினைபுரிகிறது.:[6]

CF2=CF2 + FOClO3 → CF3CF2OClO3

தனிநிலை உறுப்பு கூட்டு வினைகளிலும் இது பங்கேற்கிறது. [7]

மேற்கோள்கள்

தொகு
  1. Breazeale, J. D.; MacLaren, R. O.. Thermochemistry of oxygen-fluorine bonding, United Technology Center, Sunnyvale, CA, 1963. Accession Number: AD0402889. Retrieved online from [1] on 2009-05-21.
  2. Pradyot Patnaik. A comprehensive guide to the hazardous properties of chemical substances, 3rd ed., Wiley-Interscience, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-71458-5
  3. Robert Alan Lewis. Lewis' dictionary of toxicology, CRC Press, 1998, p. 508. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56670-223-2
  4. Rohrback, G. H.; Cady, G. H. (1947). "The Preparation of Fluorine Perchlorate from Fluorine and Perchloric Acid". Journal of the American Chemical Society 69 (3): 677–678. doi:10.1021/ja01195a063. 
  5. Schack, C. J.; Christe, K. O. (1979). "Reactions of fluorine perchlorate with fluorocarbons and the polarity of the oxygen-fluorine bond in covalent hypofluorites". Inorganic Chemistry 18 (9): 2619–2620. doi:10.1021/ic50199a056. 
  6. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  7. Schack, Carl J.; Christe, Karl O. (1979). "Reactions of fluorine perchlorate with fluorocarbons and the polarity of the oxygen-fluorine bond in covalent hypofluorites". Inorganic Chemistry 18 (9): 2619. doi:10.1021/ic50199a056. 

புற இணைப்புகள்

தொகு