புளோர்வேவ்லைட்டு
பாசுப்பேட்டுக் கனிமம்
புளோர்வேவ்லைட்டு (Fluorwavellite) என்பது Al3(PO4)2(OH)2F•5H2O.[2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும்.[2] ஓர் அரிய பாசுபேட்டு வகை கனிமமாக இது கருதப்படுகிறது.[1] கனிமத்தின் பெயர் பரிந்துரைக்கும்படி இது வேவ்லைட்டு கனிமத்தின் ஒப்புமையுமாகும. வேதியியல் ரீதியாக ஒத்த அலுமினியம் புளோரைடு பாசுபேட்டு தாதுக்களில் புளூலைட்டு, கிங்கைட்டு மற்றும் மிட்ரியாவைட்டு ஆகிய கனிமங்கள் அடங்கியுள்ளன.[3][4][5]
புளோர்வேவ்லைட்டு Fluorwavellite | |
---|---|
நெவாடாவில் கிடைத்த புளோர்வேவ்லைட்டு | |
பொதுவானாவை | |
வகை | பாசுப்பேட்டு |
வேதி வாய்பாடு | Al3(PO4)2(OH)2F•5H2O |
இனங்காணல் | |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
மேற்கோள்கள் | [1][2] |
அமெரிக்காவின் நெவாடா மாநிலம் அம்போல்ட்டு மாகாணம் வால்மி நகரத்திலுள்ள சில்வர் காயின் சுரங்கத்தில் புளோர்வேவ்லைட்டு கனிமம் கண்டறியப்பட்டது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் புளோர்வேவ்லைட்டு கனிமத்தை Fwav[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Fluorwavellite: Fluorwavellite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
- ↑ 2.0 2.1 2.2 Kampf, A.R., Adams, P.M., Barwood, H., and Nash, B.P., 2015. Fluorwavellite, IMA 2015-077. CNMNC Newsletter No. 28, December 2015, 1862; Mineralogical Magazine 79, 1859–1864
- ↑ "Fluellite: Fluellite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-10.
- ↑ "Kingite: Kingite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-10.
- ↑ "Mitryaevaite: Mitryaevaite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-10.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.