புள்ளிக்காட்டி
புள்ளிக்காட்டி [1](Scoreboard) என்பது விளையாட்டுப் போட்டியில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை புள்ளிகளைக் குறித்து காட்சிப்படுத்தும் ஒரு பலகை அல்லது கருவியாகும். இதனால் அனைவருக்கும் விளையாட்டின் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ள முடிகிறது. புள்ளிக்காட்டி பல இடங்களில் ஒரு எழுதுபலகையாக இருந்தாலும், எண்முறையியல் உலகில், தற்கால நவீனத் தொலைக்காட்சி, மற்றும் பிற எண்முறை மின்னணுக் கருவிகளாக மாறியுள்ளது.