புள்ளிங்கோ

சமூக விரோத கூட்டம்

புள்ளிங்கோ[1] (Pullingo) அல்லது புல்லைங்கோ என்பது ஒரு தமிழ் கொச்சை சொல் ஆகும்.[2] இந்த சொல் 2019இல் சமூக வலையதளங்களில் பிரபலமாக பேசப்பட்டது. இது இந்தியாவின், வடசென்னையைச் சேர்ந்த குறிப்பிட்ட இளைஞர்களை குறிக்கிறது. இவர்களின் தலைமுடி வண்ணத்துடனும், தனித்துவமான சிகை அலங்காரங்கள் மற்றும் ஒல்லியான ஜீன்ஸ் அணிந்த போன்ற தோற்றங்களிலும், ஹோண்டா டியோ வாகனத்தில் அபாயகரமாக பயணம் செய்தல் மற்றும் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுதல் போன்ற செயல்களை செய்கின்றனர்.[3] இந்த சொல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் காணப்படுகிறது.

இந்த சொல் கானா ஸ்டீபனின் 2019 ஆம் ஆண்டு கானா பாடலான "கும்பலகா சுத்துவோம், அய்யோ அம்மானு கத்துவோம்" மூலம் பிரபலப்படுத்தப்பட்டது. இது 7 மாதங்களில் 50 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது.[1][4][5]

ஆனால் இந்த சொல் இழிவான சொல் என்று சிலர் கருதுகின்றனர். எருமசானி என்னும் ஒரு யூடியூப் வீடியோவில் இந்த வார்த்தையை கேலி செய்தனர். இது பொதுமக்களின் கூச்சலுக்குப் பின்னர் அகற்றப்பட்டது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 S, Srivatsan (25 October 2019). "People have reduced ‘Pullingo’ to a slur: Gana Stephen". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/people-have-reduced-pullingo-to-a-slur-gana-stephen/article29798610.ece. 
  2. "எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்: கானா புகழ் ஸ்டீபனின் உணர்வுக் குரல்". இந்து தமிழ் (14 அக்டோபர், 2019)
  3. "சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் புள்ளிங்கோ!". News18 Tamil. 27 September 2019. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.
  4. "ஒரே பாட்டு ஓகோன்னு புகழ்... புள்ளிங்கோ புகழ் ஸ்டீபன்". News18 Tamil. 1 October 2019. பார்க்கப்பட்ட நாள் 1 November 2019.
  5. ""புள்ளிங்கோ பாடலால் இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல" - கானா ஸ்டீபன் பேட்டி!". Kalaignar Seithigal. 2 October 2019. பார்க்கப்பட்ட நாள் 1 November 2019.
  6. Tenma (14 October 2019). "'Pullingo' is toxic: Tenma writes on Erumai Saani's video mocking North Madras youth". The News Minute. பார்க்கப்பட்ட நாள் 1 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளிங்கோ&oldid=3931305" இலிருந்து மீள்விக்கப்பட்டது